இது என்ன லோக்கல் கிரிக்கெட்டா? மொய்ன் அலியின் ஷாட்டை காலாய்த்த நியூசி வீரர் – ரசிகர்கள் வியப்பு

moeen ali shot
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றி அசத்திய நிலையில் சம்பிரதாய கடைசி போட்டி பிப்ரவரி 1ஆம் தேதியன்று நடைபெற்றது. டைமண்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜேசன் ராய் 1, பென் டூக்கெட் 0, ஹரி ப்ரூக் 6 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்யாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

அதனால் 14/3 என ஆரம்பத்திலேயே திணறிய அந்த அணி மீண்டும் தோற்பது உறுதி என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மற்றொருபுறம் நங்கூரமாக நின்ற தொடக்க வீரர் டேவிட் மாலுனுடன் அடுத்த களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் நங்கூரமாக நின்று செட்டிலான இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல தென் ஆப்பிரிக்காவை அதிரடியாக எதிர்கொண்டது.

- Advertisement -

வித்யாசமான ஷாட்:
குறிப்பாக 6வது ஓவரில் இணைந்த இவர்கள் ஒரு கட்டத்துக்குப் பின் தென் ஆப்பிரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி 40 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 4வது விக்கெட்டுக்கு 232 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்தை மீட்டெடுத்தனர். அதில் டேவிட் மாலன் சதமடித்து 7 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 118 (114) ரன்கள் விளாசி அவுட்டான நிலையில் அடுத்து வந்த மொயின் அலி 2 பவுண்டரி 4 சிக்சருடன் 41 (23) ரன்கள் எடுத்தார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய கேப்டன் ஜோஸ் பட்லர் 6 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 131 (127) ரன்கள் எடுத்ததால் 50 ஓவர்களில் இங்கிலாந்து 346/7 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 4 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 345 ரன்களை துரத்திய அந்த அணிக்கு ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை எடுத்து சவால் கொடுத்ததால் எவ்வளவோ போராடியும் 43.1 ஓவரில் 287 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஹென்றிச் க்ளாஸென் 80 ரன்களும் ஹென்றிக்ஸ் 52 ரன்கள் எடுத்தாலும் கேப்டன் பாவுமா 35, டுஷன் 5, ஐடன் மார்க்ரம் 39, டேவிட் மில்லர் 13 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் தென் ஆப்பிரிக்கா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து ஆறுதல் வெற்றி பெற்றது. முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்துக்கு சரிவை சரி செய்து 232 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய டேவிட் மாலன் அவுட்டானதும் களமிறங்கிய மொய்ன் அலி அந்த நல்ல தொடக்கத்தை வீணடிக்க கூடாது என்ற எண்ணத்துடன் எப்படி போட்டாலும் அடிக்கலாம் என்ற வகையில் பேட்டிங் செய்தார்.

குறிப்பாக தப்பிரிஸ் சம்சி வீசிய 44வது ஓவரின் 4வது பந்தை திடீரென சுழன்று ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்த அவர் அதற்காக முழுமையாக தம்மை தயார்படுத்தி கொள்ளாத காரணத்தால் பேட்டை முழுமையாக கையில் பிடிக்காமலேயே ஒற்றை கையில் சுழற்றினார். போதாகுறைக்கு பந்தும் சற்று ஒய்ட் லைனில் வந்ததால் மொத்த கட்டுப்பாட்டையும் இழந்த அவர் ஒற்றை கையில் பேட்டை சுழற்றியும் பந்தை கொஞ்சம் கூட தொட முடியவில்லை. அதைப் பிடித்த தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் “என்னய்யா ஷாட் இது” என வியந்து வாயில் கை வைத்து சிரித்தது போலவே மொய்ன் அலியும் புன்னகையை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: தோனியின் இடத்தில் விளையாட வேண்டிய பொறுப்பு எனக்கு வந்துருக்கு – மெதுவான ஆட்டம் பற்றி பாண்டியா அதிரடி பேட்டி

மேலும் பார்ப்பதற்கு லோக்கல் கிரிக்கெட்டில் விளையாடுவது போல் செயல்பட்ட அவர் விளையாடிய இது போன்ற ஷாட்டை இதற்கு முன் எப்போதுமே பார்த்ததில்லை என்று வர்ணையாளர்கள் கலாய்த்தனர். அத்துடன் அதிரடியாக விளையாடுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அணுகுமுறையை கொண்டிருந்தாலும் அதற்காக இப்படியெல்லாம் செய்யலாமா என்று இங்கிலாந்தின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலமை நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீசம் ட்விட்டரில் கலாய்த்தார்.

Advertisement