தோனியின் இடத்தில் விளையாட வேண்டிய பொறுப்பு எனக்கு வந்துருக்கு – மெதுவான ஆட்டம் பற்றி பாண்டியா அதிரடி பேட்டி

Hardik-Pandya-and-Dhoni
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா சொந்த மண்ணில் தங்களை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது என்பதையும் உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணி என்பதையும் நிரூபித்துள்ளது. முன்னதாக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர் நட்சத்திர வீரர்கள் சுமாராக செயல்பட்டது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலைகளை பிசிசிஐ செய்து வருகிறது.

Hardik-Pandya

- Advertisement -

அதனாலயே டி20 உலக கோப்பைக்கு பின் இதுவரை நடைபெற்ற நியூசிலாந்து, இலங்கை, நியூஸிலாந்து ஆகிய 3 தொடர்களிலும் விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடிய இளம் அணி அதில் முறையே 1 – 0 (3), 2 – 1 (3), 2 – 1 (3) என்ற கணக்கில் வெற்றி வாகையும் சூடியுள்ளது. இந்த வெற்றிகளில் ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா மிகச் சிறப்பான பங்காற்றி வருகிறார். 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் கபில் தேவுக்கு பின் இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக உருவெடுத்தார்.

தோனியின் பொறுப்பு:
ஆனால் 2018 ஆசிய கோப்பையில் சந்தித்த படுகாயத்தால் 2019 உலக கோப்பைக்கு பின் தடுமாறிய அவர் 2021 டி20 உலகக் கோப்பையில் மோசமாக செயல்பட்டதால் அதிரடியாக கழற்றி விடப்பட்டார். இருப்பினும் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் சிறந்த ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் செயல்பட்டு கோப்பையை வென்று கம்பேக் கொடுத்த அவர் மீண்டும் தனது இடத்தை பிடித்ததுடன் இந்தியாவின் கேப்டனாகவும் முன்னேறியுள்ளார். மேலும் ஆரம்ப காலகட்டங்களில் களமிறங்கிய முதல் பந்திலிருந்து அடித்து நொறுக்கிய அவர் தோனிக்கு பின் இந்தியாவின் ஃபினிஷராகவும் உருவெடுத்தார்.

Pandya

ஆனால் காயத்துக்கு பின் குறிப்பாக கேப்டனாக பொறுப்பேற்ற பின் இப்போதெல்லாம் அவர் அதிரடியாக விளையாடுவதை பார்க்க முடிவதில்லை. மாறாக நங்கூரமாக நின்று சீராக ரன்களை குவிப்பது அல்லது கடைசி நேரத்தில் மட்டும் அதிரடி காட்டுவது போன்ற பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஜாம்பவான் தோனிக்கு பின் அவரது இடத்தில் விளையாட வேண்டிய பொறுப்பு தம்மிடம் வந்துள்ளதால் சூழ்நிலைக்கேற்றார் போல் விளையாடுவதாக பாண்டியா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதற்காக சில சமயங்களில் மெதுவாக விளையாடுவதை பற்றி கவலைப்படாமல் அணியின் நலனுக்காக விளையாடுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி நியூசிலாந்து தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற பின் பேசியது பின்வருமாறு. “நான் சிக்ஸர் அடிப்பதை மகிழ்ச்சியாக விரும்புகிறேன். ஆனால் வாழ்க்கையில் சில முன்னேற்றங்களை நான் காண வேண்டியுள்ளேன். குறிப்பாக பார்ட்னர்ஷிப் போடுவதில் நம்பிக்கை வைத்துள்ள நான் எனது அணிக்கும் எனது பார்ட்னருக்கும் ஒத்துழைக்கும் வகையில் அமைதியான வகையில் களத்தில் விளையாடுகிறேன்”

Hardik Pandya

“தற்போதைய அணியில் இருக்கும் இதர வீரர்களை காட்டிலும் நான் அதிக போட்டிகளில் விளையாடியுள்ளேன். எனவே அனைத்து சூழ்நிலைகளையும் எவ்வாறு ஏற்றுக்கொண்டு அழுத்தங்களை உள்வாங்கி அனைத்தையும் அமைதியாக இருக்க வைக்க வேண்டும் என்பதை நான் கற்றுள்ளேன். இதனால் என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் குறைந்திருக்கலாம். இருப்பினும் இந்த புதிய வேலையை சிறப்பாக செய்வதில் நான் எதிர்நோக்கியுள்ளேன். அதே சமயம் நான் புதிய பந்தையும் எடுத்து வீசுகிறேன். ஏனெனில் எனது அணியில் யாரும் கடினமான வேலைகளை செய்யக்கூடாது என்பதை நான் விரும்புகிறேன்”

இதையும் படிங்க: வீடியோ : ஒரு தாய் மண்ணில் பிறந்தும் நேரலையில் அநாகரிகமாக நடந்து கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் – பாக் ரசிகர்களே அதிருப்தி

“ஒருவேளை இதர வீரர்கள் அழுத்தத்திற்கு உள்ளானால் நாங்கள் போட்டியை துரத்த நேரிடலாம். எனவே முன்னின்று வழிநடத்த விரும்பும் நான் புதிய பந்தில் அசத்தும் யுக்திகளை கற்று வருகிறேன். மேலும் மஹி (தோனி) விளையாடுவது போல் நானும் விளையாடி சில சரிவுகளை சந்தித்தால் அதற்காக கவலைப்பட மாட்டேன். ஆரம்ப காலத்தில் நான் இளமையாக இருந்ததால் அனைத்து திசைகளிலும் அதிரடியாக அடித்தேன். ஆனால் தோனி ஓய்வு பெற்று விட்டதால் அந்த பொறுப்பு என்னிடம் வந்துள்ளது. எனவே எங்களுக்கு சாதகமாக வெற்றி வரும் வரை நான் மெதுவாக விளையாடுவதைப் பற்றி கவலைப்படவில்லை” என்று கூறினார்.

Advertisement