வீடியோ : ஒரு தாய் மண்ணில் பிறந்தும் நேரலையில் அநாகரிகமாக நடந்து கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் – பாக் ரசிகர்களே அதிருப்தி

- Advertisement -

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதுடன் சில சர்ச்சைகளையும் அரங்கேற்றி வருகிறது. குறிப்பாக ஏற்கனவே கோபத்தை கட்டுப்படுத்த நடுவரை அடிக்காத குறையாக நடந்து கொண்ட வங்கதேச நட்சத்திர வீரர் சாகிப் அல் ஹசன் மீண்டும் இந்த தொடரில் ஒன்றுக்கு இரண்டு முறை நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. அதே போல் அவ்வபோது சூதாட்டம் முதல் களத்தில் அநாகரிகமாக நடந்து கொள்வது வரை சர்ச்சையான விஷயங்களில் பாகிஸ்தான் வீரர்கள் ஈடுபடுவது சர்வ சாதாரணமாகும்.

அது போன்ற ஒரு நிகழ்வு தான் ஜனவரி 31ஆம் தேதியன்று நடைபெற்ற குல்னா டைகர்ஸ் மற்றும் கோமிலா விக்டோரியன்ஸ் அணிகள் மோதியா போட்டியில் அரங்கேறியது. அந்தப் போட்டியில் குல்னா அணிக்காக முன்னாள் பாகிஸ்தான் வீரர் மொய்ன் கான் அவர்களது மகன் அசாம் கான் கடைசி ஓவரில் பேட்டிங் செய்ய களமிறங்க பெவிலியனில் இருந்து மெதுவாக நடந்து வந்தார். அப்போது கோமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக பந்து வீசிய இளம் பாகிஸ்தான் வீரர் நாசீம் ஷா அசாம் கானுடைய உடல் பருமனை கிண்டலடிக்கும் வகையில் 2 கைகளையும் பக்கவாட்டு பகுதியில் உயர்த்தி நடந்து வருவது போல் சைகை செய்தார்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
அத்தோடு நிற்காத அவர் அவ்வாறு செய்து கொண்டே அசாம் கான் மீது நேரடியாக மோதி கட்டிப்பிடிக்கும் வகையில் சென்றார். அதனால் கோபமடைந்த அசாம் கான் அருகில் வந்த நாசீம் ஷா மீது வலுவாக மோதித்தள்ளினார். மேலும் கிண்டலடிக்கும் வகையில் ஏதோ சில வார்த்தைகளை பேசிய அவரிடம் பேசாமல் விலகிச் செல்லுமாறு அசாம் கான் தள்ளி விட்டார். ஆனால் அதன் பின்பும் அவருடைய உடல் எடையை கிண்டலடிக்கும் வகையில் நாசீம் ஷா முன்பு போலவே நடந்து காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ஒரே நாட்டைச் சேர்ந்த இருவரும் நண்பர்களாக பழகுவதால் இது நட்பு ரீதியான கேலிக்கை என்று சில பாகிஸ்தான் செய்தியாளர்கள் இந்த அநாகரிக செயலை மூடி மறைக்கும் வகையில் பேசினார்கள்.

ஆனால் ஒருவருடைய உடல் எடையை கிண்டலடிக்கும் வகையில் நடந்து கொள்வது தான் கேலிக்கையா? என்று கேள்வி எழுப்பும் பாகிஸ்தான் ரசிகர்கள் உண்மையான நண்பர்கள் ஒருவரை ஒருவர் இப்படி உடல் ரீதியான அம்சங்களை கிண்டலடிக்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள். அந்த வகையில் அசாம் கான் உடல் பருமனை நாசீம் ஷா வேண்டுமென்றே கிண்டலடித்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்த நிறைய ரசிகர்களே இந்த வீடியோவை பார்த்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

அதிலும் ஒரு தாய் மண்ணில் பிறந்து ஒரே தேசத்துக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக விளையாடும் சக வீரரின் உடல் பருமனை கிண்டலடித்த நாசீம் ஷா மிகவும் மோசமான குணத்தை கொண்டுள்ளதாகவும் அவருக்கு அபராதம் அல்லது தடை போன்ற தக்க தண்டனையை கொடுக்க வேண்டும் என நிறைய ரசிகர்கள் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்கள். அவர்கள் கூறுவது போல என்ன தான் நட்பாக இருந்தாலும் உடலைப் பற்றி ஒருவர் கிண்டலடிக்கும் போது நிச்சயமாக கிண்டலுக்கு உள்ளாகும் நபர் மனதளவில் காயத்தை சந்திப்பார் என்பதில் சந்தேகமில்லை.

எனவே இனிமேலாவது இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்ளாதீர்கள் என்று நாசீம் ஷா’வை பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். முன்னதாக கடந்த 2022 ஆசிய கோப்பையில் அறிமுகமான நாசீம் ஷா இந்தியாவுக்கு எதிராக காயத்துடன் வெற்றிக்காக போராடி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்தார்.

இதையும் படிங்க: IND vs NZ : இலங்கை தொடர்ல நெனச்சேன். ஆனா நியூசிலாந்து தோடரில் தான் நடந்தது – சுப்மன் கில் மகிழ்ச்சி

மேலும் நல்ல வேகத்தில் தொடர்ச்சியாக வீசும் அவர் பாகிஸ்தானின் வருங்கால நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து வருகிறார். மறுபுறம் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் இதுவரை தனது இடத்தை தக்க வைக்கும் அளவுக்கு அசாம் கான் அசத்தலாக செயல்படாமல் தடுமாறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement