IND vs NZ : இலங்கை தொடர்ல நெனச்சேன். ஆனா நியூசிலாந்து தோடரில் தான் நடந்தது – சுப்மன் கில் மகிழ்ச்சி

Shubman-Gill
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது சுப்மன் கில்லின் சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் என்ற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

Shubman-Gill

- Advertisement -

பின்னர் 235 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 12.1 ஓவரில் 66 ரன்களை மட்டுமே குவித்து 168 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது மட்டுமின்றி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இரண்டு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது.

ஏற்கனவே ஒருநாள் தொடரினை இந்திய அணியிடம் இழந்த நியூசிலாந்து அணியானது தற்போது டி20 தொடரையும் இந்திய அணியிடம் இழந்துள்ளது. இந்நிலையில் இந்த மூன்றாவது டி20 போட்டியின் போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் 63 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 126 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

Shubman Gill

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான பார்மேட்டிலும் சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையையும், டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்த இந்திய வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை சுப்மன் கில் நிகழ்த்தினார். இந்நிலையில் இந்த தொடரில் தான் சிறப்பாக விளையாடியது குறித்து பேசிய சுப்மன் கில் கூறுகையில் : பயிற்சியின்போது நன்றாக செயல்பட்டால் அது போட்டியிலும் உங்களை ஆட்டத்தை மெருகேற்றும்.

- Advertisement -

அந்த வகையில் நான் நன்றாக பயிற்சி மேற்கொண்டதால் என்னுடைய ஆட்டம் சிறப்பாக இருக்கிறது. அதேபோன்று பெரிய பெரிய ஸ்கோர்களை அடிக்க வேண்டும் என்று நினைத்து நான் விளையாடி வருகிறேன். இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் நான் நிறைய ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்த தொடரில் அது நடக்காமல் போனது. ஆனால் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நான் மிகச் சிறப்பாக விளையாடி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதையும் படிங்க : IND vs NZ : இந்த ஒரு விஷயத்தை நெனைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு – தோல்வி குறித்து மிட்சல் சான்ட்னர் பேட்டி

ஒவ்வொரு பேட்ஸ்மேனும் சிக்ஸ் அடிக்க தனித்தனி டெக்னிக் வைத்திருக்கிறார்கள். ஆனால் பாண்டியா என்னிடம் வந்து சொன்னது ஒரே ஒரு விடயம் தான். நீ உன்னுடைய ஆட்டத்தை விளையாடு நிச்சயம் அது உனக்கு சிறப்பாக இன்னிங்ஸ்சாக மாறும் என்று கூறினார். அந்த வகையில் நான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement