IND vs NZ : இந்த ஒரு விஷயத்தை நெனைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு – தோல்வி குறித்து மிட்சல் சான்ட்னர் பேட்டி

Mitchell-Santner
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது ஏற்கனவே இங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கும் பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் தற்போது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்து பரிதாப தோல்வியுடன் நாடு திரும்பியுள்ளது.

IND-vs-NZ

இந்த டி20 தொடரில் சீனியர் வீரர்கள் இல்லாமல் பாண்டியாவின் தலைமையிலான இந்திய அணி பங்கேற்றதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் உச்சத்தில் இருந்தது. ஆனால் இந்த தொடரை மிகச் சிறப்பாக கையாண்ட ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தாலும் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்று கணக்கில் கைப்பற்றியது.

- Advertisement -

அதோடு ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் தற்போது மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணியே அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்க வேண்டும் என்றும் பேசப்படும் அளவிற்கு தற்போது இந்திய அணி மாறியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது சுப்மன் கில்லின் அபார சதம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்தது.

IND vs NZ Hardik Pandya

பின்னர் 235 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி நியூசிலாந்து அணியானது 12.1 ஓவரில் 66 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்ததால் 128 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் கூறுகையில் : இந்த தோல்வி உண்மையிலேயே எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஏனெனில் இந்த தொடரையாவது நாங்கள் கைப்பற்றி கோப்பையை வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

- Advertisement -

ஆனால் இந்திய அணியின் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை வீழ்த்தி விட்டனர். இந்திய அணியில் தற்போது இருக்கும் வீரர்கள் நல்ல முமென்ட்டத்துடன் இருக்கின்றனர். அவர்கள் விளையாடும் விதம் மிகவும் அருமையாக உள்ளது. பவர்பிளே ஓவர்களிலேயே ஐந்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் வெற்றியை நோக்கி யோசிக்கக்கூட முடியவில்லை.

இதையும் படிங்க : IND vs NZ : எல்லாத்துக்குமே தைரியம் தான் காரணம். தொடர் வெற்றி குறித்து ஹார்டிக் பாண்டியா- பேசியது என்ன?

இந்தியா போன்ற மைதானங்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். ஆனால் இந்திய வீரர்கள் இங்குள்ள தன்மையை சரியாக பயன்படுத்தி மிகச்சிறப்பாக விளையாடுகின்றனர். இந்த ஆண்டு இங்கு உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கும் வேளையில் அவர்களுக்கு இது மிகச் சிறப்பான அனுபவமாக இருக்கும். இருந்தாலும் இது போன்ற தொடர்களிலிருந்து நாங்கள் பல்வேறு விடயங்களை புதிதாக கற்றுக் கொள்கிறோம் என மிட்சல் சான்ட்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement