IND vs NZ : எல்லாத்துக்குமே தைரியம் தான் காரணம். தொடர் வெற்றி குறித்து ஹார்டிக் பாண்டியா- பேசியது என்ன?

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இல்லாததன் காரணமாக ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான இந்திய அணியே டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. வழக்கம் போலவே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியாவின் தலைமையிலான இந்திய அணி இந்த டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

Umran Malik

- Advertisement -

எதிர்வரும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு தற்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வரும் வேளையில் இந்த தொடரில் அவர்கள் அனைவரது ஆட்டமும் அபாரமாக இருந்து வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்தது.

பின்னர் 235 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 12.1 ஓவரில் 66 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய ஹார்டிக் பாண்டியா கூறுகையில் :

Pandya-and-SKY

தொடர் நாயகன் விருது கிடைப்பது பற்றி எல்லாம் நான் யோசிப்பது கூட கிடையாது. ஒரு தொடரில் என்னுடைய செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என்பதை மட்டுமே நான் எதிர்பார்ப்பேன். அதோடு இந்த வெற்றிகளுக்கு எல்லாம் உதவும் எங்களுடைய ஊழியர்கள் மற்றும் அணி நிர்வாகம் ஆகியவர்களை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

- Advertisement -

ஏனெனில் ஒவ்வொரு விடயத்தையும் எங்களுக்காக அவர்கள் செய்து வருவதை பார்ப்பதற்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றியை நான் அவர்களுடன் கொண்டாட விரும்புகிறேன். எப்பொழுதுமே நான் களத்தில் விளையாடும்போது என்னுடைய தைரியத்தை நம்பி தான் விளையாடுகிறேன். போட்டி எப்படி இருந்தாலும் அதனை எளிதாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையை கொண்டு வந்து தைரியத்துடன் விளையாடுவதால் என்னால் எளிதாக போட்டிகளை அணுக முடிகிறது.

இதையும் படிங்க : வீடியோ : ஹனிமூன் அப்றம் தான், இந்தியாவுக்கு விளையாட பயிற்சிகளை துவங்கிய ராகுல் – கம்பேக் விவரம் இதோ

இனிவரும் போட்டிகளிலும் இதே போன்ற ஆட்டத்தை தான் நான் வெளிப்படுத்துவேன். ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியின் போது நாங்கள் இங்கு இரண்டாவதாக பேட்டிங் செய்தோம். ஆனால் இன்று முதலாவதாக பேட்டிங் செய்து அதிக ரன்களை குவிக்க முடியும் என்று நினைத்து முதலில் பேட்டிங் செய்தோம் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement