IND vs WI : அடுத்த டிராவிட், லக்ஷ்மனனு சொன்னாங்க. இப்போ பாத்தா ஆளையே காணோம் – டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட வீரர்

IND
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த மிகப்பெரிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

IND

- Advertisement -

அந்த அணியில் ரோகித் சர்மா கேப்டனாகவும், அஜின்க்யா ரஹானே துணைக்கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டனர். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட வேளையில் முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இளம் வீரர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் ஆகியோருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் நிலையான இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட 29 வயதான ஆந்திர வீரர் ஹனுமா விஹாரி இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியிலும் இடம் பெறவில்லை என்பது அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கலாம்.

Vihari

இந்திய அணிக்காக கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகமான ஹனுமா விஹாரி இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி 839 ரன்கள் குவித்துள்ளார். அதிலும் ஆஸ்திரேலியா மண்ணில் அஸ்வினுடன் சேர்ந்து காயத்துடன் போராடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை காப்பாற்றிய ஹனுமா விஹாரி இந்திய அணியில் லட்சுமணன் போன்று நிலைத்து நின்று ஆடக்கூடியவர் என்றும் புஜாராவிற்கு அடுத்து டிராவிடின் இடத்தை நிரப்பப்போவது இவர்தான் என்ற பேச்சுக்களும் அப்போது இருந்து வந்தது.

- Advertisement -

ஆனால் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து சற்று விலகியிருந்த விஹாரி விரைவில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது டெஸ்ட் அணியிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டு விட்டாரோ என்ற கருத்தே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : போய்ருவேன்னு நெனச்சீங்களா, இந்தியாவின் கேப்டனாக மாஸ் கம்பேக் கொடுக்கும் ஷிகர் தவான் – எந்த தொடரில் தெரியுமா

ஏனெனில் டெஸ்ட் வடிவத்தில் மட்டுமே விளையாடி வந்த விஹாரியை தற்போது இந்திய அணியின் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. அதோடு ஸ்ரேயாஸ் ஐயர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களை நோக்கியே இந்திய நிர்வாகம் பயணிப்பதால் ஹனுமா விஹாரி முற்றிலும் ஓரங்கட்டப்பட்டு விட்டாரோ என்ற சந்தேகமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement