IPL 2023 : இந்த பவுலிங்கை தாண்டி சிஎஸ்கே கப் ஜெயிக்கிறது கஷ்டம் தான் – கில்லுடன் சேர்ந்து மிரட்டும் குஜராத்தின் மும்மூர்த்திகள்

CSK vs GT 2
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கிய 10 அணிகளும் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்கு கடுமையாக போட்டியிட்ட நிலையில் நடப்பு சாம்பியன் குஜராத், முன்னாள் சாம்பியன், சென்னை, லக்னோ மற்றும் வெற்றிகரமான மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதை தொடர்ந்து சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் குஜராத்தை 3 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக தோற்கடித்த சென்னை நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

அதன் பின் எலிமினேட்டரில் லக்னோவை தோற்கடித்த வெற்றிகரமான மும்பையை நேற்று நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நடப்பு சாம்பியன் குஜராத் மே 28இல் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் சென்னையை ஃபைனலில் எதிர்கொள்ள தயாராகியுள்ளது. அதில் 2008 முதல் களமிறங்கிய 14 சீசனங்களில் 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்று 10 முறை ஃபைனலுக்கும் தகுதி பெற்று 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் தோனி தலைமையிலான சென்னை 5வது கோப்பையை வெல்லுமா எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

குஜராத்தின் மும்மூர்த்திகள்:
இருப்பினும் காலம் காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சென்னைக்கு கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்டு இதுவரை நடந்த 2 சீசன்களிலும் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நடப்புச் சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் பெரிய சவாலை கொடுக்க உள்ளது. குறிப்பாக இதுவரை சந்தித்த 4 போட்டிகளில் 3இல் தொடர்ச்சியாக வென்று வந்த அந்த அணியை கடந்த குவாலிபயர் 1 போட்டியில் தான் முதல் முறையாக சென்னை போராடி தோற்றுடித்தது.

ஆனால் கோட்டையான சேப்பாக்கத்தில் வென்ற சென்னையை ஃபைனலில் தங்களுடைய கோட்டையான அகமதாபாத்தில் எதிர்கொள்வது குஜராத்துக்கு மிகப்பெரிய பலமாகும். ஏனெனில் அந்த மைதானத்தில் மார்ச் 31இல் துவங்கிய இந்த சீசனின் முதல் போட்டியில் ஏற்கனவே சென்னையை தோற்கடித்த குஜராத் மொத்தமாக 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. போதாக்குறைக்கு சர்வதேச அளவில் அகமதாபாத் மைதானத்தில் டி20, டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த சுப்மன் கில் இந்த ஐபிஎல் தொடரில் கடந்த 2 போட்டிகளில் அடுத்தடுத்த சதங்களையும் விளாசி உச்சகட்ட ஃபார்மில் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அத்துடன் சஹா முதல் ரசித் கான் வரை பேட்டிங் வரிசை ஆழமாகக் கொண்டுள்ளதால் சேசிங் செய்வதற்கு பெயர் போன குஜராத் அணியின் பேட்டிங்கை விட பந்து வீச்சு மிரட்டலாக இருக்கிறது. குறிப்பாக வேகப்பந்து வீச்சு துறையில் கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் பவர் பிளே முதல் டெத் ஓவர்கள் வரை தன்னுடைய அனுபவத்தால் மிரட்டலாக செயல்படும் முகமது ஷமி 16 போட்டிகளில் 28 விக்கெட்களை எடுத்து அதிக விக்கெட்கள் எடுத்த பவுலராக சாதனை படைத்து ஊதா தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.

அவருக்கு போட்டியாக ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட விக்கெட்களை எடுத்து டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தானின் ரசித் கானும் 16 போட்டிகளில் 27 விக்கெட்களை எடுத்து 2வது இடத்தில் ஊதா தொப்பிக்கு போட்டி போடுகிறார். குறிப்பாக ஆண்ட்ரே ரசல் முதல் ஜெய்ஸ்வால் வரை 90% பேட்ஸ்மேன்கள் அவரை அதிரடியாக அடிப்பதற்கு திணறுவார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவர்களுக்கு போட்டியாக கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் இந்த சீசனில் ஆஷிஷ் நெஹ்ரா கொடுத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி ஸ்லோ பந்துகளை வீசி 24 விக்கெட்களை எடுத்துள்ள மோகித் சர்மா தன்னுடைய அனுபவத்தால் 3வது இடத்தில் ஊதா தொப்பிக்கு போட்டி போடுகிறார்.

- Advertisement -

சொல்லப்போனால் ஐபிஎல் வரலாற்றில் ஊதா தொப்பி பட்டியலில் டாப் 3 வீரர்களும் ஒரே அணியை சேர்ந்தவர்களாக இருப்பது இதுவே முதல் முறையாகும். மறுபுறம் அதே ஊதா தொப்பி பட்டியலில் சென்னை அணியை பார்த்தால் 5வது இடத்தில் ரன் மெஷின் என ரசிகர்கள் கலாய்க்கும் துசார் தேஷ்பாண்டே (22 விக்கெட்கள்) உள்ளார்.

இதையும் படிங்க:IPL 2023 : அந்த கேட்ச் மட்டும் பிடிச்சிருந்தா – பிளேயிங் லெவனில் உலக சாதனை படைத்தும் பரிதாபமாக தோற்ற மும்பை

மொத்தத்தில் ராஜாங்கம் நடத்தும் அகமதாபாத் மைதானத்தில் சுப்மன் கில்லுக்கு நிகராக ஊதா தொப்பி பட்டியலில் டாப் 3 இடங்களை பிடித்து மிரட்டி வரும் இந்த 3 மும்மூர்த்தி பவுலர்களை கொண்ட குஜராத்தின் பவுலிங்கை தாண்டி சென்னை எப்படி கோப்பையை வெல்லப்போகிறது என்பது அந்த அணி ரசிகர்களின் கவலையாக மாறியுள்ளது.

Advertisement