- Advertisement -
ஐ.பி.எல்

நல்லவேளை சி.எஸ்.கே அணியிலிருந்து வெளிய போனதும் நல்லதுதான் – சாய் கிஷோருக்கு அடித்த அதிர்ஷ்டம்

பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது கடந்த இரு தினங்களாக பெங்களூருவில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். அதிலும் குறிப்பாக சென்னை அணி தேர்ந்தெடுக்கும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகமாகவே காணப்பட்டது. ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் மிக முக்கிய அணியாக பார்க்கப்படும் சென்னை அணியானது இதுவரை நான்கு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

தோனி நமது அணிக்கு தலைமை வகிப்பதாலும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற அணியாக சென்னை அணியை திகழ்கிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்களை சிஎஸ்கே தேர்ந்தெடுக்கப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே இருந்த நிலையில் நேற்று முழு வீரர்களும் எடுக்கப்பட்டு தற்போது சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களின் பட்டியலும் முழுவதுமாக வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த சிஎஸ்கே அணியில் சில வீரர்கள் கோடிக்கணக்கில் வாங்கப்பட்டாலும் பல இளம் வீரர்கள் குறைந்த தொகைக்கு வாங்கப்பட்டனர். ஆனாலும் அப்படி தேர்வு செய்த அனைவருமே திறமைசாலிகள் என்பதால் அவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறி உள்ள தமிழக வீரர் சாய் கிஷோருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் பொதுவாகவே சிஎஸ்கே அணியில் இடம்பெறும் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இதற்கு உதாரணமாக ஹரி நிஷாந்த் கடந்த சில சீசன்களாகவே சென்னை அணியில் இருந்தாலும் அவருக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி இந்த ஆண்டும் அவர் 20 லட்சம் என்கிற அடிப்படை விலைக்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதே போன்று மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜெகதீசனும் சிஎஸ்கே அடிப்படையில் விலைக்கு வாங்கி தங்கள் மீது எந்த பழியும் வரக்கூடாது என்பதற்காக வெறுமனே பென்ச்சில் அமர வைத்திருக்கும். அவரும் ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை அணியில் இருந்தாலும் வெறும் ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இப்படி சிஎஸ்கே அணியில் இடம் பெறும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று முடிவு செய்யப்பட்டுள்ள வேளையில் தற்போது சாய் கிஷோர் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறி குஜராத் அணிக்காக விளையாட இருக்கிறார்.

இதையும் படிங்க : முதல் முறையாக ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்ற 2 வெ.இ வீரர்கள் – அதிர்ஷ்டம் தான்

அதுவும் ஒரு நல்ல தொகைக்கு அவர் தேர்வாகியுள்ளார். சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுத்திருந்தால் நிச்சயம் சில லட்சங்களைத் தாண்டி இருக்காது. ஆனால் தற்போது அவரை குஜராத் அணி 3 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. மேலும் குஜராத் அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களில் இவர் சிறப்பானவர் என்பதால் பிளேயிங் லெவனில் விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிதால் இவருக்கு கோடிகளில் பணமும், தனது திறமையை நிரூபிக்க பிளேயிங் லெவனில் வாய்ப்பும் கிடைக்கும் என்பதால் சி.எஸ்.கே அணியில் இருந்து இவர் வெளியேறியிருந்தாலும் இவரை அதிர்ஷ்டசாலி என்று ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by