முதல் முறையாக ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்ற 2 வெ.இ வீரர்கள் – அதிர்ஷ்டம் தான்

WI
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அன்று துவங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மிகவும் அபாரமாக செயல்பட்ட இந்தியா 3 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 3 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது.

chahal

- Advertisement -

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்த இந்தியா புதிய சாதனை படைத்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த இந்த ஒருநாள் தொடர் நிறைவடைந்துள்ளதை அடுத்து இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் உலகப்புகழ் பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

கலக்கிய வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள்:
வரும் பிப்ரவரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த டி20 தொடரில் பங்கேற்பதற்காக கொல்கத்தா சென்றடைந்துள்ள இரு அணி வீரர்களும் அங்கு தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னதாக இந்த டி20 தொடருக்கு முன்னதாக இந்தியாவில் ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் பெங்களூருவில் நடைபெற்றது.

SKY

பொதுவாகவே அதிரடி மன்னர்கள் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களை அனைத்து அணிகளும் மிகுந்த விருப்பத்துடன் வாங்கும். ஆனால் இம்முறை நடந்த மெகா ஏலத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போனார்கள். சொல்லப்போனால் இந்த ஏலத்தில் அதிக பட்சமாக ஹெட்மயர், பிராவோ, எவின் லெவிஸ் உள்ளிட்ட 11 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்த ஏலத்தில் வாங்கப்பட்டார்கள்.

- Advertisement -

இந்தியாவின் அதிர்ஷ்டம்:
குறிப்பாக தற்போது இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் அசத்திய சில வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால் இந்தியாவில் வந்து இந்திய மண்ணில் விளையாடிய அதிர்ஷ்டம் காரணமாக அவர்கள் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளார்கள் என்றே கூறலாம். அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

odean smith

1. ஓடின் ஸ்மித் : வெஸ்ட்இண்டீஸ் அணியைச் சேர்ந்த 25 வயது இளம் வீரர் ஓடின் ஸ்மித் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். குறிப்பாக சில தினங்களுக்கு முன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 169 ரன்களுக்கு வெஸ்ட்இண்டீஸ் ஆல் அவுட்டான போது அந்த அணிக்கு அதிக பட்சமாக இவர்தான் 18 பந்துகளில் 36 ரன்கள் விளாசினார். இதுமட்டுமல்லாமல் கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரிலும் இவர் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

- Advertisement -

ஒரு அதிரடியான வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் இவர் லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கி கடைசி நேரத்தில் அதிரடியாக சிக்சர்களை பறக்கவிட்டு கணிசமான ரன்களை குவிக்கும் திறமையும் பெற்றுள்ளார். இவ்வளவு திறமைகள் கொண்டுள்ள இவரை பல அணிகள் வாங்க போட்டி போட்ட நிலையில் இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் 6 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

Shepherd

2. ரொமேரியோ ஷெபார்ட் : ஓடின் ஸ்மித் போலவே ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருப்பதுடன் லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கி சிக்சர்களை பறக்க விடுவதில் ரொமாரியோ செபார்ட் வல்லவராக இருக்கிறார். குறிப்பாக கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடரின் ஒரு போட்டியில் 7வது இடத்தில் களமிறங்கிய இவர் வெறும் 28 பந்துகளில் 44* ரன்களை விளாசி தனது அணியை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இந்திய ஒருநாள் தொடரிலும் கிடைத்த வாய்ப்பில் அசத்திய இவரை வாங்க அனைத்து அணிகளிடமும் கடும் போட்டி நிலவிய நிலையில் இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7.75 கோடிகளுக்கு வெற்றிகரமாக வாங்கியது.

Holder 1

3. ஜேசன் ஹோல்டர் : இவர்களைப் போலவே நடைபெற்று முடிந்த இந்திய ஒருநாள் தொடரில் நட்சத்திர வீரர் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே அபாரமாக செயல்பட்டார். குறிப்பாக இந்திய ஒருநாள் தொடரில் இதர பேட்டிங் வீரர்கள் சொதப்பிய வேளையில் அவர் மட்டும் 3 போட்டிகளிலுமே தனி ஒருவனாக நின்று முயன்றவரை போராடினார்.

அத்துடன் கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரின் கடைசி போட்டியில் கடைசி ஓவரில் ஹாட்ரிக் உட்பட 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை அள்ளிய அவர் தனது அணியை வெற்றி பெறச் செய்து கோப்பையை பெற்றுக் கொடுத்தார். இதன் காரணமாக 8.75 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி சற்றும் யோசிக்காமல் அவரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதையும் படிங்க : குறிப்பிட்ட அணியை சேர்ந்த வெளிநாட்டு வீரர்களை மட்டுமே குறிவைத்து எடுத்த சி.எஸ்.கே – என்ன திட்டமா இருக்கும்?

இது மட்டுமல்லாமல் இந்திய ஒருநாள் தொடரில் அசத்திய அல்சாரி ஜோசப் (2.40 கோடி – குஜராத்), நிக்கோலஸ் பூரான் (10.75 கோடி – ஹைதெராபாத்) போன்ற வெஸ்ட்இண்டீஸ் வீரர்களும் நல்ல தொகைக்கு ஐபிஎல் ஏலத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement