ஐபிஎல் 2023 ஏலம் : பாண்டியா தலைமையில் மீண்டும் கோப்பை வாங்க குஜராத் தக்க வைத்த – விடுவித்த வீரர்களின் பட்டியல்

- Advertisement -

உலகில் நடைபெறும் அத்தனை டி20 தொடர்களுக்கும் அரசனாக திகழும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023 மார்ச் மாதம் இந்தியாவிலேயே கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த வருடம் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய புதிய 2 அணிகள் உருவாக்கப்பட்டதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரில் 2 நாட்கள் மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். அதன் காரணமாக 2023 சீசனுக்கான வீரர்கள் ஏலம் சிறிய அளவில் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதற்கு முன்பாக தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை நவம்பர் 15க்குள் சமர்ப்பிக்க பிசிசிஐ கெடு விதித்திருந்தது.

Gujarat Titans GT Champ

- Advertisement -

அதன் படி ஒவ்வொரு அணிகளும் தங்களது பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டாலும் முதல் வருடத்திலேயே பட்டாசாக செயல்பட்டு யாருமே எதிர்பாராத வகையில் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்காக முதல் சீசனில் அபாரமாக செயல்பட்ட முக்கிய கிரிக்கெட் வீரர்களை மீண்டும் தக்க வைத்துள்ளது. குறிப்பாக கேப்டனஷிப் அனுபவமில்லாத போதிலும் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழி நடத்தி மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்டு இந்திய அணிக்குள் மீண்டும் கம்பேக் கொடுக்கும் அளவுக்கு மிரட்டிய ஹர்திக் பாண்டியா அந்த அணியின் கேப்டனாக மீண்டும் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

குஜராத் அணி:

விரைவில் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த சீசன் மட்டுமல்லாமல் அடுத்து வரும் சீசன்களிலும் ஹர்திக் பாண்டியா முதன்மை வீரராக குஜராத் அணியில் தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் சுழல் நாயகன் ரசித் கான், பேட்டிங்கில் மிரட்டிய டேவிட் மில்லர், ராகுல் திவாடியா, சுப்மன் கில், போன்ற முக்கிய வீரர்களும் பந்து வீச்சில் அசத்திய முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள் ஆகியோரும் மீண்டும் தக்க வைக்கப்பட்டுள்ளார்கள். அதை விட சாய் கிஷோர், சாய் சுதர்சன், விஜய் சங்கர் என சென்னை அணியில் இல்லாத அளவுக்கு 3 தமிழக வீரர்களும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

gujarat titans

முன்னதாக டிரேடிங் விண்டோ வாயிலாக லாக்கி பெர்குசன் மற்றும் ரகமதுல்லா குர்பாஸ் ஆகியோரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாற்றிய குஜராத் நிர்வாகம் ஃபார்மின்றி தவிக்கும் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயை மொத்தமாக விடுவித்துள்ளது. அவர்களுடன் இந்திய வீரர் வருண் ஆரோன் உட்பட 6 வீரர்களை கழற்றி விட்டுள்ள குஜராத் நிர்வாகம் 18 வீரர்களை தக்க வைத்துள்ளது.

- Advertisement -

அதனால் தற்போது அந்த அணியில் அதிகபட்சமாக 7 வீரர்களின் இடங்கள் காலியாக உள்ளது. அதில் அந்த அணியால் அதிகபட்சமாக 3 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும். மேலும் முதல் வருடத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையில் செய்த மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தி கோப்பையை தக்க வைப்பதற்காக எஞ்சிய வீரர்களை வரும் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் மினி ஏலத்தில் வாங்குவதற்காக களமிறங்கும் குஜராத் அணியிடம் 19.25 கோடி ஏல்த் தொகை கையிருப்பு உள்ளது.

Gujarat Titans Road Show Hardik Pandya

குஜராத் டைட்டன்ஸ் அணி தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்: ஹர்டிக் பாண்டியா (கேப்டன்), சுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், வ்ரிதிமான் சஹா, மேத்தியூ வேட், ரஷீத் கான், ராகுல் திவாட்டியா, விஜய் சங்கர், முகமத் ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் சங்வான், தர்ஷன் நல்கண்டே, ஜெயந் யாதவ், ஆர் சாய் கிஷோர், நூர் அஹ்மத்

இதையும் படிங்க: ஐபிஎல் 2023 ஏலம் : மாஸ்டர் கோச் தலைமையில் கோப்பை வெல்ல கொல்கத்தா தக்க வைத்த – கழற்றி விட்ட வீரர்களின் பட்டியல்

குஜராத் டைட்டன்ஸ் அணி விடுவித்துள்ள வீரர்களின் பட்டியல்:
ரஹ்மதுல்லாஹ் குர்பாஸ், லாக்லி பெர்குசன், டோமினிக் ட்ராக்ஸ் , குர்கீரத் சிங், ஜேசன் ராய், வருண் ஆரோன்

Advertisement