அடுத்து எந்த பிளானும் இல்ல.. 9 ஆவது தோல்வியை பதிவு செய்த பிறகு மும்பை கேப்டன் – ஹார்டிக் பாண்டியா வருத்தம்

Pandya
- Advertisement -

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் போட்டியில் விளையாடிய ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது ஒன்பதாவது தோல்வியை பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

மும்பை அணி பெற்ற இந்து தோல்வி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக துவங்கியதால் போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பிறகு டாசில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் பத்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களையும், நித்திஷ் ரானா 33 ரன்களையும் குவித்தனர். பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது :

கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே குவித்ததால் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறுகையில் : உண்மையிலேயே இந்த தோல்வி கடினமான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக பேட்டிங் யூனிட் பலமாக இருந்தும் நாங்கள் சிறப்பாக செயல்படாதது வருத்தம் அளிக்கிறது.

- Advertisement -

ஆரம்பத்தில் நல்ல துவக்கம் கிடைத்தும் எங்களால் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. இந்த போட்டியில் நிச்சயம் இந்த இலக்கு எட்டக்கூடிய ஒன்றுதான். ஆனாலும் கொல்கத்தா அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி விட்டனர். எங்களது அணியின் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.

இதையும் படிங்க : போட்டிக்கு முன்பாக நான் எங்க டீம் பிளேயர்ஸ் கிட்ட சொன்ன விடயம் இதுதான்.. மும்பையை வீழ்த்திய பிறகு – ஷ்ரேயாஸ் மகிழ்ச்சி

ஆனாலும் பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படாததால் இந்த தோல்வி ஏற்பட்டது. அடுத்த போட்டிக்காக இனி எங்களிடம் எந்த பிளானும் கிடையாது. விளையாடும் வரை மகிழ்ச்சியாக விளையாடிவிட்டு நல்ல கிரிக்கெட்டை ஆடினோம் என்ற நினைப்பு இருந்தால் மட்டுமே போதும். இந்த தொடரில் நாங்கள் போதுமான அளவு சிறப்பான கிரிக்கெட்டை விளையாடவில்லை என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement