போட்டிக்கு முன்பாக நான் எங்க டீம் பிளேயர்ஸ் கிட்ட சொன்ன விடயம் இதுதான்.. மும்பையை வீழ்த்திய பிறகு – ஷ்ரேயாஸ் மகிழ்ச்சி

Shreyas
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. மழை காரணமாக போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் நேற்றைய ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

அதன்படி டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களையும், நித்திஷ் ரானா 33 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 16 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே குவித்ததால் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 40 ரன்களையும், திலக் வர்மா 32 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : நான் இந்த போட்டிக்கு முன்பாக எங்களது அணி வீரர்களிடம் நமது அணி முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்று கூறினேன்.

- Advertisement -

அதோடு இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாம் வெற்றி பெற வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். அந்த வகையில் எங்களது அணியின் வீரர்கள் அனைவருமே தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றியை தேடித் தந்துள்ளனர். இந்த அணி மிகச் சிறப்பான அணி நிச்சயம் எங்களால் இன்று தொடரை வெல்ல முடியும்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்.. புதிய கேப்டன் யார்? வெளியான அறிவிப்பு

மும்பை அணி முதல் 6 ஓவர்களில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தாலும் அடுத்து எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு அவர்களை வீழ்த்தியதை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. சாதனைகளையும், புள்ளி விவரங்களையும் நான் யோசிப்பது கிடையாது நமது அணி வெற்றி பெற வேண்டும் அது மட்டுமே என்னுடைய எண்ணம் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement