ரோஹித்தை அவுட்டாக்கிய பிளான் இது தான்.. மும்பையை வீழ்த்திய தமிழக ஆட்டநாயகன் வருண் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே பதினொன்றாம் தேதி நடைபெற்ற 60வது லீக் போட்டியில் மும்பையை 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. மழையால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 157/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42, நிதிஷ் ராணா 32, ரசல் 24 ரன்கள் எடுத்தனர்.

மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா 2, பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 158 ரன்களை துரத்திய மும்பைக்கு இசான் கிசான் 40 (22) ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் ரோகித் சர்மா 19 (24) சூரியகுமார் யாதவ் 11 (14) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். போதாக்குறைக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா 2, டிம் டேவிட் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் வருண்:
அதனால் திலக் வர்மா 32, நமன் திர் 17 ரன்கள் எடுத்தும் 16 ஓவரில் 139/8 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை மீண்டும் பரிதாபமாக தோற்றது. மறுபுறம் 9வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்று அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

குறிப்பாக நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவை 19 ரன்களில் அவுட்டாக்கிய அவர் 4 ஓவரில் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் பிட்ச் சாதகமாக இருந்ததை பயன்படுத்தி ரோகித் சர்மாவை அவுட்டாக்கியதாக வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் சுனில் நரேனை விட தம்முடைய டெக்னிக் கொஞ்சம் வித்தியாசமானது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோகித் சர்மாவை அக்ராஸ் தி லைனில் அடிக்க வைப்பதே திட்டமாகும். அதே சமயம் பிட்ச்சில் உதவி இருந்தது. அதை எனக்கு சாதகமாக என்னால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. டெக்னிக்கல் அளவில் பேசும் போது சுனில் நரேன் மற்றும் என்னுடைய பவுலிங் ஒரே மாதிரியானது. இருப்பினும் அதில் எங்களுக்கிடையே சிறிய வித்தியாசம் இருக்கிறது. ஆரம்பத்தில் பிட்ச் ஃபிளாட்டாக இருந்தது”

இதையும் படிங்க: போட்டிக்கு முன்பாக நான் எங்க டீம் பிளேயர்ஸ் கிட்ட சொன்ன விடயம் இதுதான்.. மும்பையை வீழ்த்திய பிறகு – ஷ்ரேயாஸ் மகிழ்ச்சி

“என்னுடைய பவுலிங் முதல் போட்டியில் இருந்தே ஒரே மாதிரியாகவே உள்ளது. அதற்கான வெற்றி முடிவுகள் தற்போது வருகிறது” என்று கூறினார். மொத்தத்தில் கௌதம் கம்பீர் ஆலோசகராக வந்ததும் மீண்டும் கொல்கத்தா அணி அதிரடியாக செயல்பட்டு வெற்றி பாதையில் நடக்கிறது. அதனால் இந்த வருடம் அந்த அணி கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement