CSK vs GT : ஃபைனலில் குஜராத்தின் இரட்டை வரலாற்று சாதனையை – மழையின் உதவியுடன் சிஎஸ்கே தூளாக்கியது எப்படி?

CSK-vs-GT-1
- Advertisement -

இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டு தொடரான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை 5வது கோப்பையை வென்று அதிக கோப்பைகளை வென்ற அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனை சமன் செய்தது. அகமதாபாத் நகரில் மழையால் ரிசர்வ் நாளில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 214/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 96 (47) ரன்களும் ரிதிமான் சஹா 54 (39) ரன்களும் எடுக்க சுமாராக செயல்பட்ட சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

CSK vs GT Final

- Advertisement -

அதை தொடர்ந்து மழை பெய்ததால் 15 ஓவரில் 121 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கை துரத்திய சென்னைக்கு 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ருதுராஜ் கைக்வாட் 26 (16) ரன்களும் டேவோன் கான்வே 47 (25) ரன்களும் எடுத்து அவுட்டாக மிடில் ஆர்டரில் ரகானே 27 (13) ரன்களும் ராயுடு 19 (8) ரன்களும் எடுத்துப் போராடி அவுட்டானார்கள். அந்த நிலையில் வந்த கேப்டன் தோனி கோல்டன் டக் அவுட்டானாலும் மறுபுறம் அசத்திய சிவம் துபே 32* (21) ரன்கள் எடுத்தார்.

உதவிய மழை:
அதனால் வெற்றியை நெருங்கிய சென்னைக்கு மோகித் சர்மா வீசிய கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்சரையும் பவுண்டரியும் பறக்க விட்ட ஜடேஜா 15* (9) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் சென்னை த்ரில் வெற்றி பெற்று கோப்பையை முத்தமிட்ட நிலையில் மோஹித் சர்மா 3 விக்கெட் எடுத்தும் தங்களது சொந்த ஊரான அகமதாபாத் கோட்டையில் குஜராத் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பை நழுவ விட்டது. முன்னதாக மே 28இல் துவங்கிய இந்த போட்டி மழையால் 29, 30 என 3 நாட்கள் நடைபெற்றது மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்தினாலும் சென்னைக்கு மிகப்பெரிய உதவியை செய்தது என்றே சொல்லலாம்.

ஏனெனில் இப்போட்டியில் முதல் 6 ஓவர்களில் சென்னையை பந்தாடி 62 ரன்கள் குவித்த குஜராத் ஐபிஎல் வரலாற்றின் ஃபைனலில் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற மும்பையின் சாதனை உடைத்து புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் 2015 ஐபிஎல் ஃபைனலில் இதே சென்னைக்கு எதிராக மும்பையும் 2020 ஐபிஎல் ஃபைனலில் டெல்லிக்கு எதிராக மும்பையும் தலா 61 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அப்படி சிறந்த தொடக்கத்தை பெற்றதால் 20 ஓவர்களின் முடிவில் 214/4 ரன்கள் குவித்த குஜராத் ஐபிஎல் வரலாற்றின் ஃபைனலில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற ஹைதராபாத் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2016 ஃபைனலில் பெங்களூருவுக்கு எதிராக ஹைதராபாத் 208/7 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். பொதுவாக எந்த வகையான டி20 தொடராக இருந்தாலும் மிகப்பெரிய அழுத்தம் நிறைந்த ஃபைனலில் வெறும் 120 – 130 ரன்களை வெற்றிகரமாக துரத்துவதே அசாத்தியமான காரியமாகும்.

Rain

அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன் வேறு எந்த அணியும் 200க்கும் மேற்பட்ட ரன்களை துரத்திக் கோப்பை வென்றதே கிடையாது. சொல்லப்போனால் 16 வருட வரலாற்றில் 2014 ஃபைனலில் மட்டுமே பஞ்சாப் நிர்ணயித்த 200 ரன்களை வெற்றிகரமாக துரத்திய கொல்கத்தா கோப்பையை வென்றது. அதை தவிர்த்து வேறு அந்த அணியும் 201 ரன்களை கூட சேசிங் செய்வதில்லை.

- Advertisement -

அப்படிப்பட்ட நிலையில் இப்போட்டியில் கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் வலுவான குஜராத்துக்கு எதிராக 215 என்ற வரலாற்றின் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக துரத்த வேண்டிய கட்டாயத்திற்கு சென்னை தள்ளப்பட்டது. ஆனால் குறுக்கே மழை வந்ததால் 15 ஓவரில் 171 என்று இலக்கு மாற்றப்பட்டது முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடிய சென்னைக்கு சாதகமாக மாறியது.

இதையும் படிங்க:IPL 2023 : சிஎஸ்கே’வுக்கு சிம்ம சொப்பனமாக மாறி போராடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் – ஃபைனலில் படைத்த 3 சாதனைகள் இதோ

அது போக ஈரப்பதமான சூழ்நிலையால் பந்தை சரியாகப் பிடித்து வீச முடியாமல் ரசித் கான் போன்ற பவுலர்களும் தடுமாறினர். அதை பயன்படுத்தி இந்த ஐபிஎல் ஃபைனலில் குஜராத் படைத்த இரட்டை சாதனையை மழையின் உதவியுடன் தூளாக்கிய சென்னை 5வது கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ஒருவேளை முழுமையாக மழை பெய்திருந்தாலும் குஜராத் கோப்பையை வென்றிருக்கும்.

Advertisement