GT vs MI : பும்ரா எங்கய்யா இருக்க, டெத் ஓவர்களில் அடித்து நொறுக்கிய குஜராத் சாதனை ஸ்கோர் – மும்பை மோசமான பவுலிங் சாதனை

GT vs MI Abinhav Manohar Miller
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 25ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 35வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பத்திலேயே அனுபவ வீரர் ரிதிமான் சகாவை அர்ஜுன் டெண்டுல்கர் 4 (7) ரன்கள் அவுட்டாக்கி அசத்தினார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடி காட்டிய நிலையில் அடுத்து களமிறங்கி நங்கூரமாக செயல்பட முயற்சித்த கேப்டன் ஹரிதிக் பாண்டியா 13 (14) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

ஆனாலும் மறுபுறம் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய சுப்மன் கில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதமடித்து 56 (34) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த விஜய் சங்கர் 19 (16) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 12.2 ஓவரில் 101/4 என தடுமாறிய குஜராத்தை அடுத்ததாக களமிறங்கிய அபினவ் மனோகர் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்து சரிவை சரி செய்தனர். குறிப்பாக 15 ஓவர்களுக்கு மேல் மும்பை பவுலர்களை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி ஓவருக்கு 10க்கும் மேற்பட்ட ரன்களை விளாசியது.

- Advertisement -

மோசமான பவுலிங்:
குறிப்பாக அடுத்த 6 ஓவரில் 5வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டெத் ஓவர்களில் மும்பை பவுலர்களை புரட்டி எடுத்த இந்த ஜோடி கேமரூன் கிரீன் வீசிய 18வது ஓவரில் மட்டும் 22 ரன்கள் விளாசியது. அதில் இளம் வீரர் அபினவ் மனோகர் 3 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்க விட்டு 42 (21) ரன்களை 200 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய ராகுல் திவாட்டியா ஜேசன் பேரன்ஃடாப் வீசிய கடைசி ஓவரில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்ட நிலையில் மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடியாக செயல்பட்ட டேவிட் மில்லர் 2 பவுண்டரின் 4 சிக்சருடன் 46 (22) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ராகுல் திவாடியா 3 சிக்ஸருடன் 20* (5) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் 207/6 ரன்கள் எடுத்த குஜராத் தன்னுடைய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் இதே சீசனில் கொல்கத்தாவுக்கு எதிராக 204/4 ரன்கள் எடுத்ததே குஜராத்தின் முந்தைய அதிகபட்ச ஸ்கோராகும். மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக பும்ரா காயத்தால் வெளியேறியதால் பின்னடைவை சந்தித்த மும்பைக்கு கடந்த வருடம் இலவச சம்பளம் கொடுத்து பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் இந்த சீசனில் ஒரு சில போட்டிகளில் விளையாடி காயமடைந்து பெஞ்சில் அமர்ந்து வருகிறார்.

- Advertisement -

அதனால் டெத் ஓவர்களில் வீசுவதற்கு சரியான பவுலர்கள் இல்லாமல் திண்டாடும் மும்பை கேமரூன் கிரீன் போன்றவர்களை வைத்து சமாளித்து வருகிறது. அதே போல அர்ஜுன் டெண்டுல்கரை முயற்சிக்கலாம் என்ற எண்ணமும் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் அவர் ஒரே ஓவரில் 31 ரன்கள் வாரி வழங்கியதுடன் கைவிடப்பட்டது. அதனால் மும்பையின் பெரிய பலவீனத்தை இந்த போட்டியில் பயன்படுத்திய குஜராத்துக்கு டேவிட் மில்லர், அபினவ் மனோகர் ஆகியோர் அதிரடியாக விளையாடி

மறுபுறம் ஒரு காலத்தில் துல்லியமான பந்து வீச்சு கூட்டணியை கொண்டிருந்த அணியான மும்பை கடந்த போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக 214 ரன்கள் வாரி வழங்கிய நிலையில் இப்போட்டியில் 207 ரன்கள் கொடுத்துள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் 200 ரன்கள் கொடுத்து மும்பை மோசமான சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: வீடியோ : பும்ரா எங்கய்யா இருக்க, டெத் ஓவர்களில் அடித்து நொறுக்கிய குஜராத் – மும்பை மோசமான பவுலிங் சாதனை

அதனால் பும்ரா எங்கப்பா இருக்க என்று மும்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்து வரும் அவர் இதே போட்டியை அகமதாபாத் மைதானத்தில் நேரடியாக பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து அகமதாபாத் மைதானம் பேட்டிங்க்கு சாதகமானது என்பதால் ரோகித் சர்மா, சூரியகுமார் போன்ற வெறித்தனமான பேட்ஸ்மேன்களை கொண்ட மும்பையும் 208 ரன்கள் இலக்கை துரத்தி வெற்றி காண்பதற்கு போராடி வருகிறது.

Advertisement