IPL 2023 : எல்லாரும் அப்டி தான் சொல்வாங்க, நீ அதை மட்டும் செய் 140 வேகத்தில் வீசலாம் – அர்ஜுனுக்கு பிரட் லீ முக்கிய அட்வைஸ்

Brett Lee
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த வருடம் புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்திருந்த மும்பை இம்முறை 6ஆவது கோப்பையை வென்று கம்பேக் கொடுக்கும் முனைப்புடன் விளையாடி வருகிறது. அந்த வகையில் தன்னுடைய முதல் 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து போராடி வரும் அந்த அணிக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமாகி விளையாடி வருகிறார். நாட்டுக்காக இடது கை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக விளையாட வேண்டுமென்ற தனது தந்தையின் ஆசைக்கிணங்க பயிற்சிகளை துவங்கிய அவர் சமீப காலங்களில் நெட் பவுலராக செயல்பட்டார்.

Arjun-Tendulkar-1

- Advertisement -

இருப்பினும் ஜாம்பவானின் மகன் என்பதால் விரைவில் வாய்ப்பு பெற்று விட்டார் என்ற விமர்சனங்கள் வரும் என்பதற்காகவே அவருக்கு கடந்த வருடம் மும்பை நிர்வாகம் வாய்ப்பு கொடுக்கவில்லை. அந்த நிலையில் கடந்த ரஞ்சி கோப்பையில் கோவா அணிக்காக விளையாடி முதல் முறையாக சதமடித்தஅ அவர் தற்போது நல்ல அனுபவத்தை பெற்றிருப்பதால் ஒரு வழியாக இந்த வருடம் அறிமுகமானார். அதில் ஹைதராபாத்துக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் புவனேஸ்வர் குமாரின் அவுட்டாக்கி எடுத்த அவர் முதல் விக்கெட்டை பதிவு செய்தது ரோகித் சர்மா, சச்சின் உட்பட அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது.

ஜாம்பவானின் ஆலோசனை:
இருப்பினும் சராசரியாக வெறும் 110 – 120 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசும் அவரது பந்துகளை புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக ரிங்கு சிங் போன்ற இளம் பேட்ஸ்மேன்கள் இருந்திருந்தால் கூட சரமாரியாக அடித்திருப்பார்கள் என்பதால் விரைவில் பந்து வீச்சில் வேகத்தை அதிகரிக்குமாறு ரசிகர்கள் விமர்சித்தனர். அதே போல் ஆக்சன், லேண்டிங் ஆகிய எதுவுமே சரியில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் தடாலடியாக விமர்சித்தார். அந்த நிலையில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் எதிர்பார்த்தது போலவே ஹர்பிரித் சிங் – சாம் கரண் ஆகியோர் ஜோடி சேர்ந்து ஒரே ஓவரில் அவரை அடித்து நொறுக்கினர்.

PBKS vs MI Arjun tendulkar

அதனால் ஒரே ஓவரில் 31 ரன்கள் கொடுத்த அர்ஜெண்ட் டெண்டுல்கர் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் நிறைய கிண்டல்களும் விமர்சனங்களும் காணப்படுகின்றன. இந்நிலையில் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இருக்கும் நீங்கள் எது செய்தாலும் கிண்டலடித்து விமர்சிப்பவர்களை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கடினமாக உழைத்துப் பயிற்சி எடுத்தால் விரைவில் 140 கி.மீ வேகத்தில் பந்து வீச முடியும் என்று அர்ஜுனுக்கு ஜாம்பவான் பிரட் லீ ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவரால் எல்லா அம்சங்களையும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். அர்ஜுன் டெண்டுல்கரின் பவுலிங் என்னை மிகவும் கவர்ந்தது. மும்பை அணிக்காக அவர் அற்புதமான ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன். குறிப்பாக மும்பை அணியில் இருக்கும் பவுலர்களை விட அவர் புதிய பந்தை அதிகமாக ஸ்விங் செய்கிறார். அவர் மிடில் ஓவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் நிலையில் அனுபவத்தை பெற்றால் டெத் ஓவர்களிலும் அசத்தலாம். எனவே அவரை நான் பாராட்டுகிறேன். இங்கே அனைவரும் எது செய்தாலும் விமர்சிப்பார்கள்”

Lee

“தற்போது 23 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவருக்கு இன்னும் முழுமையான கேரியர் காத்திருக்கிறது. எனவே அவருடைய தந்தை குறைந்த ஸ்கோர் அடித்த போது வந்த விமர்சனங்களை தவிர்த்தது போல இதையும் கண்டுகொள்ளாதீர்கள் என்பதே அவருக்கு என்னுடைய ஆலோசனையாகும். நீங்கள் உங்களுடைய திறமைக்கு ஆதரவு கொடுங்கள். அதை செய்தாலே விரைவில் வெளிச்சத்திற்கு கீழே ரசிகர்களுக்கு முன்னிலையில் அவரால் 140 கி.மீ வேகத்தில் பந்து வீச முடியும். அவருடைய வேகத்தில் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை”

இதையும் படிங்க: DC vs SRH : இது எங்களோட பெஸ்ட்டே கிடையாது. ஆனாலும் மொத்தத்துல ஹேப்பி – ஆன்ரிச் நோர்கியா பேட்டி

“ஏனெனில் அவர் எவ்வளவு வேகத்தில் ஓடுவார் என்பது எனக்கு தெரியும். எனவே யாருடைய விமர்சனங்களையும் காதில் வாங்காமல் தற்போது செய்வதை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள் என்பதே அவருக்கு என்னுடைய ஆலோசனையாகும். ஏனெனில் சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் வெறும் விசைப்பலகை வீரர்களே தவிர தங்களுடைய வாழ்நாளில் ஒரு பந்து கூட வீசியிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்.

Advertisement