DC vs SRH : இது எங்களோட பெஸ்ட்டே கிடையாது. ஆனாலும் மொத்தத்துல ஹேப்பி – ஆன்ரிச் நோர்கியா பேட்டி

Anrich-Nortje
- Advertisement -

கடந்த மார்ச் 31-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது ஏப்ரல் மாதத்தின் இறுதி நாட்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை அனைத்து அணிகளும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் புள்ளி பட்டியலில் நிலையான மாற்றங்கள் இருந்து கொண்டு தான் வருகின்றன. அந்த வகையில் நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்த 34-வது ஆட்டத்தில் டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின.

DC vs SRH

- Advertisement -

இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய டெல்லி அணியானது ஏழு ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை மிகக் குறுகிய வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் குவித்தது.

பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

Nortje

இந்நிலையில் இந்த போட்டியின் போது டெல்லி அணிக்காக விளையாடிய நோர்க்கியா பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன் அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய நோர்க்கியா கூறுகையில் : இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி இருந்தாலும் இது எங்களுடைய சிறப்பான ஆட்டம் கிடையாது.

- Advertisement -

பேட்டிங்கில் நாங்கள் சற்று குறைவான ரன்களை எடுத்து விட்டோம். ஆனாலும் எங்களது அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தால் இந்த போட்டியில் வெற்றி பெற முடிந்தது. இந்த மைதானம் பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருந்ததாலும், பந்துவீச்சுக்கு நல்ல சப்போர்ட் இருந்ததாலும் எங்களுடைய திட்டத்தை நாங்கள் சரியாக வைத்து செயல்பட்டதாலும் வெற்றியும் கிடைத்தது.

இதையும் படிங்க : வீடியோ : 50வது பிறந்தநாள் பரிசாக சிட்னியை தொடர்ந்து ஷார்ஜாவில் சச்சினுக்கு வழங்கப்பட்ட பெரிய கெளரவம்

ஆனால் இந்த போட்டியில் விளையாடியது எங்களுடைய சிறப்பான ஆட்டம் கிடையாது இனிவரும் போட்டிகளில் நிச்சயம் இந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையை அப்படியே எங்களது பலமாக மாற்றுவோம் என நோர்க்கியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement