தொடர் வெற்றி, டேபிள் டாப்பர் ஆனால் பயமா இருக்கு! வெற்றிநடை போடும் குஜராத் கேப்டன் பாண்டியாவின் கவலை

Pandya
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மேலும் அனலை தெறிக்கவிடும் வகையில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெற்ற 40-ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட குஜராத் வெறும் 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத்துக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் 5 (8) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ராகுல் திரிப்பாதியும் 16 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

Abishek Sharma

- Advertisement -

இருப்பினும் அடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ரன்களை குவிப்பில் ஈடுபட்டார். 3-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த இந்த ஜோடியில் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 65 (42) ரன்கள் எடுத்து அபிஷேக் சர்மா ஆட்டமிழக்க அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 3 ரன்களில் அவுட்டானார்.

குஜராத் மாஸ் வெற்றி:
அந்த நிலைமையில் 56 (40) ரன்கள் எடுத்து மார்க்ரம் ஆட்டமிழக்க கடைசி நேரத்தில் இளம் வீரர் ஷஷாங்க் சிங் அதிரடியாக 25* (6) ரன்கள் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் 195/6 என்ற மிகப்பெரிய ரன்களை ஹைதராபாத் விளாசியது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 196 என்ற பெரிய இலக்கை துரத்திய குஜராத்துக்கு ரித்திமான் சஹா – சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமான தொடக்கம் கொடுத்த போது சுப்மன் கில் 22 (24) பந்துகளில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

SRH vs LSG

அடுத்த சில ஓவர்களில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த சகா 68 (38) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த டேவிட் மில்லர் 17 (19), அபினவ் மனோகர் 0 (1) என அடுத்தடுத்து அவுட்டானதால் திடீரென குஜராத் தோல்வியின் பிடியில் சிக்கியது. குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டதாலும் ஏற்கனவே 5 விக்கெட்டுகளை இழந்த காரணத்தாலும் குஜராத்தின் தோல்வி உறுதி என அனைவரும் நினைத்தனர். ஆனால் அப்போது களமிறங்கிய ராகுல் திவாடியா அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டு போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அவருக்கு உறுதுணையாக ரஷித் கான் கைகோர்க்க கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் சிக்ஸர் பறக்க விட்ட திவாடியா 2-வது பந்தில் சிங்கிள் எடுக்க 3-வது பந்தில் யாருமே எதிர்பாராத வகையில் சிக்ஸர் பறக்க விட்ட ரசித் கான் 4-வது பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் கடைசி 2 பந்துகளில் தெறிக்கவிடும் 2 சிக்சர்களை பறக்கவிட்டு குஜராத்துக்கு எதிர்பாராத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதில் திவாடியா 40* (21) ரன்களும் ரசித் கான் 31* (11) ரன்களும் எடுத்து ஹைதராபாத் வெற்றியை தவிடுபொடியாக்கினார்.

GT

பாண்டியாவின் கவலை:
இந்த வருடம் முதல் போட்டியிலிருந்தே பாண்டியா தலைமையில் சொல்லி அடிக்கும் கில்லியாக செயல்பட்டு வரும் குஜராத் இதுவரை பங்கேற்று 8 போட்டிகளில் 7 வெற்றியை பதிவு செய்து 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. பேட்டிங், பவுலிங் என அந்த அணியின் அனைத்து துறைகளிலும் பாண்டியா, ரசித் கான் போன்ற வீரர்கள் தேவையான நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்டு தொடர் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

- Advertisement -

இப்படி தனது அணி வெற்றி நடை போடுவது மகிழ்ச்சியாக இருந்தாலும் அது பயத்தையும் கொடுக்கிறது என்று நேற்றைய போட்டிக்குப் பின் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்கள் அணியின் உடை மாற்றும் அறையில் “நீங்கள் திறமையானவர்கள் என்பதால் நான் உங்களுக்கு உதவி செய்வேன்” என்று கடவுள் தொடர்ந்து என்னிடம் கூறுவதாக அனைவரிடமும் கூறி நான் அடிக்கடி ஜோக் செய்வேன். அதுபோலவே தற்போது நடைபெற்றாலும் நாக் – அவுட் போட்டிகளில் எங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்காமல் போய் விடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நாங்கள் சில்லென இருக்கிறோம். இந்த அனைத்து புகழும் வீரர்களை சரியாக வழிநடத்தும் பயிற்சியாளர்களை சேரும்” என்று பேசினார்.

pandya 1

இந்த வருடம் மற்ற அணிகளை காட்டிலும் அதிர்ஷ்டத்தின் உதவியால் ஒருசில கையில் எட்டாத வெற்றிகளைக் கூட குஜராத் பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாக பஞ்சாப்க்கு எதிராக கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸர் அடித்து ராகுல் திவாடியா பெற்றுக்கொடுத்த வெற்றி, சென்னைக்கு எதிராக டேவிட் மில்லரின் மிரட்டலான ஆட்டம், நேற்றைய போட்டியில் ஹைதராபாத்துக்கு எதிராக எதிர்பாராமல் கிடைத்த வெற்றி போன்றவைகளில் தங்களது வீரர்கள் திறமையை பயன்படுத்தினார்கள் என்றாலும் அதில் சிறிது அதிர்ஷ்டமும் கலந்துள்ளது என்று பாண்டியா நம்புகிறார்.

இதையும் படிங்க : யாருப்பா இவரு? அறிமுக போட்டியிலேயே ரசிகர்களை வியக்க வைத்த இளம் வீரர் – இப்படி ஒரு அதிரடியா?

ஆனால் இப்போது வெறும் லீக் சுற்றில் கிடைக்கும் அந்த அதிர்ஷ்டம் முக்கியமான நாக்-அவுட் சுற்றில் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் மனதுக்குள் இருப்பதாக தொடர் வெற்றிகளுக்கு மத்தியிலும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

Advertisement