சச்சினுக்கும் இதே பிரச்சனை இருந்துச்சு, அதை ஃபாலோ பண்ணா விராட் கோலியால் 2023 உ.கோ ஜெயிக்க முடியும் – கிரேக் சேப்பல் அட்வைஸ்

Greg Chappell 2
- Advertisement -

வரும் அக்டோபர் 5 முதல் உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்க போகும் ஐசிசி 2023 உலக கோப்பை இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. அதில் எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறையின் முதுகெலும்பாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் கருதப்படும் விராட் கோலி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று சொல்லலாம்.

Virat Kohli and Babar Azam

- Advertisement -

கடந்த 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலிருந்து இம்முறை விளையாட போகும் ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள அவர் அப்போதை விட தற்போது அதிகப்படியான அனுபவத்தை கொண்டுள்ளார். மேலும் 2019க்குப்பின் சதமடிக்காத கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஃபார்முக்கு திரும்பியுள்ள அவர் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேப்பலின் ஆலோசனை:
இந்நிலையில் திறமை மற்றும் அனுபவத்திற்கு பஞ்சமில்லாத விராட் கோலி மனதளவில் எதைப் பற்றியும் யோசிக்காமல் புத்துணர்ச்சியுடன் விளையாடும் பட்சத்தில் இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் அளவுக்கு அசத்த முடியும் என்று முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கூறியுள்ளார். அதாவது இளமையாக இருக்கும் போது எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரன்களை அடிக்கும் வீரர்கள் நட்சத்திரங்களாக உருவெடுத்த பின் எதிரணியினரை எப்படி வீழ்த்தலாம் என்று யோசித்தே தடுமாறுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Sachin Dhoni Virat Kohli

ஒரு முறை சச்சின் டெண்டுல்கர் இதே போன்ற நிலைமையில் தடுமாறிய போது கொடுத்த ஆலோசனையை விராட் கோலிக்கும் தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “சாம்பியன் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் பெரிய போட்டிகளில் அசத்தும் இலக்கை கொண்டிருப்பார். அவர் தாம் விளையாடும் அனைத்து தொடர்களிலும் அசத்த விரும்புவார். இந்தியாவின் பயிற்சியாளராக வந்த பின் ஒரு முறை என்னுடைய ஹோட்டல் அறையில் இருந்த போது சச்சின் எனக்கு போன் செய்து உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என சொன்னார்”

- Advertisement -

“அதை தொடர்ந்து என்னுடைய அறைக்கு வந்த அவர் ஏன் இப்போதெல்லாம் பேட்டிங் கடினமாக இருக்கிறது? அனுபவத்தால் அது எளிமையாக வேண்டுமே? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நான் அனுபவத்தால் பேட்டிங் எளிமையாகி விடாது என்று பதிலளித்தேன். அதாவது நீங்கள் இளம் வீரராக இருக்கும் போது வேற எதை பற்றியும் சிந்திக்காமல் பந்தை பார்த்து ரன்களை மட்டுமே அடிக்க மட்டும் விரும்புவீர்கள். இருப்பினும் நாளடைவில் எதிரணி நமக்கு எதிராக எப்படி செயல்படுவார்கள் என்று நீங்கள் நினைப்பீர்கள்”

Chappell 3

“அதே போல எதிரணியும் உங்களுக்கு எதிராக எப்படி பந்து வீச வேண்டும் என்பனவற்றை நன்றாக தெரிந்து கொள்கின்றனர். இது போன்ற தகவல்கள் உங்கள் மனதில் சிக்கல்களை ஏற்படுத்தும் எனவே நீங்கள் இளமையாக இருந்த போது எடுத்த ரன்களை இப்போதும் எடுக்க இளமையில் என்ன செய்தீர்கள் என்று சிந்திக்க வேண்டும். அந்த சாவியை திறந்தால் தொடக்கத்தில் நீங்கள் விளையாடியதைப் போல இப்போதைய நிலைமையும் கட்டுப்படுத்தலாம். அதை தான் 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி செய்தார். அதை நீங்கள் மீண்டும் போய் பார்த்தால் அந்த ஷாட்கள் தனித்து நிற்கும். அவரது பெரும்பாலான ஷாட்டுகள் பந்தின் தகுதிக்கேற்ப விளையாடப்பட்ட வழக்கமான ஷாட்டுகளாகும். என்னுடைய புத்தகத்தில் அது அற்புதமான மாஸ்டர் கிளாஸாகும்”

இதையும் படிங்க:அவங்க மட்டும் கடன் வாங்கி விளையாட வைக்கலைனா இன்னைக்கு இந்தியாவுக்கு விளையாடிருக்க மாட்டேன் – ரிங்கு சிங் நெகிழ்ச்சி பேட்டி

“எனவே இந்த புறம்பான தகவல்களின் சிலவற்றை அகற்றி எளிமையை கடைபிடித்து அடிப்படை விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் தம்முடைய கேரியரின் இந்த இடத்தில் விராட் கோலி பெரிய ரன்களை எடுப்பதற்கு ஸ்பெஷல் உழைப்பை போட வேண்டும் என்பதை நான் அறிவேன். எனவே இந்த உலகக் கோப்பையில் அவர் அதே போன்ற மனநிலையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக எப்போதும் போல இந்த உலகக் கோப்பையை கவலையற்ற மனநிலையுடன் அணுகினால் இந்தியாவுக்காக அவர் அதிக ரன்கள் அடித்து இத்தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருப்பார்” என்று கூறினார்.

Advertisement