வெற்றி நிச்சயம், பாதிப்பை பயன்படுத்தி பந்தாடுங்க – இந்தியாவை சாய்க்க ஆஸி அணிக்கு கிரேக் சேப்பல் கொடுத்த அட்வைஸ் என்ன

- Advertisement -

2023 ஜூலை மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடப் போகும் அணிகளை வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் துவங்கும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தீர்மானிக்க உள்ளது. ஏனெனில் இதுவரை நடைபெற்ற லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா, இலங்கை ஆகிய 4 அணிகளுக்கு ஃபைனல் செல்லும் வாய்ப்புள்ளது. அதில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் ஃபைனல் வாய்ப்பு உறுதியாகி விட்ட நிலையில் இந்தியா தகுதி பெறுவதற்கு இத்தொடரில் குறைந்தபட்சம் 3 வெற்றிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

AUs vs IND

- Advertisement -

இருப்பினும் கடந்த 2012க்குப்பின் சொந்த மண்ணில் உலகில் எந்த அணிக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இம்முறையும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஃபைனல் தகுதி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால் ஏற்கனவே ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட காரணத்தால் எப்படியாவது இந்தியாவை தோற்கடித்தாக வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது. ஏனெனில் கடைசியாக 2014இல் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்ற அந்த அணி அதன் பின் 2017, 2018/19, 2020/21 ஆகிய 3 அடுத்த அடுத்தடுத்த தொடர்களில் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்துள்ளது.

கிரேக் சேப்பல் அட்வைஸ்:
அதை விட கடைசியாக நடந்த 2 தொடர்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்த இந்தியா அவமான தோல்வியை பரிசளித்தது. எனவே அவை அனைத்திற்கும் இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்க காத்திருக்கும் ஆஸ்திரேலியா 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று தங்களை உலகின் நம்பர் கிரிக்கெட் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாடுகிறது. அந்தளவுக்கு வெறியுடன் களமிறங்கும் ஆஸ்திரேலியா 2004க்குப்பின் வெல்லும் என்ற ஆதரவுடன் அதற்கான ஆலோசனைகளை ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற சில முன்னாள் வீரர்கள் வழங்கி வருகிறார்கள்.

Rishabh-Pant

அந்த வரிசையில் இணைந்துள்ள கிரேக் சேப்பல் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகிய 2 முக்கிய வீரர்கள் இல்லாமல் இருப்பதை பயன்படுத்தி இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்கான சில ஆலோசனைகளையும் தெரிவித்துள்ள அவர் இது பற்றி சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரை ஆஸ்திரேலியா வெல்லும். ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்களின் காயங்கள் காரணமாக சமீப காலங்களில் இல்லாததை விட இம்முறை இந்தியா தங்களது சொந்த மண்ணில் பாதிப்பை சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. அவர்கள் பெரிதும் விராட் கோலியை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்”

- Advertisement -

“இந்தியாவுக்கு வருகை தரும் அணிகள் பெரும்பாலும் எங்கும் செல்லாத ஒரு விளையாட்டால் ஏமாற்றப்படுகின்றன. ஆனால் திடீரென்று ஒரு வெறித்தனமான வேகத்தால் அதை மாற்ற முடியும். இந்தியர்கள் அதற்கு பழகி விட்டனர். எனவே வெற்றிக்கு மனம், பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றில் விரைவாக ஆஸ்திரேலியா தங்களை மாற்றியமைக்க வேண்டும். மேலும் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தால் அஸ்டன் அகர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஏனெனில் கைவிரல் ஸ்பின் எப்போதுமே துல்லியமாக இருக்கும்”

Greg-Chappell

“அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே அரிதாகவே நேர் மற்றும் நெருக்கத்தை இழந்தார். அவர் எப்போதும் வேகம், பிளாட் லெக் பிரேக்ஸ் ஆகியவற்றை பின்பற்றி ஸ்டம்புகளை தாக்கும் அச்சுறுத்தலை கொடுப்பவராக இருந்தார். அதை தவற விட்டால் நாம் ஆபத்தில் சிக்கி விடுவோம் என்பதை பேட்ஸ்மேன்கள் அறிவார்கள். ஜடேஜாவும் அவரை போன்றே பந்து வீசக்கூடியவர்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ’யில் ஒருத்தர பார்க்கலாம், ரெண்டு பேருக்கும் வாய்ப்பில்லை – விராட், ரோஹித் பற்றி வாசிம் ஜாபர் கருத்து

அதாவது ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாதது இம்முறை இந்தியாவுக்கு சொந்த மண்ணில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதை பயன்படுத்தி ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் அனில் கும்ப்ளே போல் செயல்படும் தன்மை ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் அஸ்டன் அகரிடம் இருப்பதால் அவர் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.

Advertisement