2024 டி20 உ.கோ’யில் ஒருத்தர பார்க்கலாம், ரெண்டு பேருக்கும் வாய்ப்பில்லை – விராட், ரோஹித் பற்றி வாசிம் ஜாபர் கருத்து

- Advertisement -

விராட் கோலிக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் இருதரப்பு தொடர்களில் அசத்திய இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய போதிலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் வழக்கமான தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் முக்கிய காரணமாக அமைந்ததால் அதிருப்தியடைந்த பிசிசிஐ 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. அதனாலேயே உலக கோப்பைக்குப்பின் இது வரை நடைபெற்ற நியூசிலாந்து, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 3 டி20 தொடர்களில் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா வெற்றியும் கண்டது.

INDia Hardik pandya

- Advertisement -

இதன் காரணமாக ரோஹித் சர்மா, அஷ்வின், தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுல் போன்ற சீனியர் வீரர்களின் டி20 கேரியர் மறைமுகமாக முடிந்து விட்டதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்கள் மோசமாக செயல்பட்டார்கள் என்பதற்காக விராட் கோலியையும் அவர்களோடு ஒருவராக கழற்றி விட நினைப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்று சமூகவலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மனாக சாதனை படைத்துள்ள விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்காமல் பார்மை இழந்து தடுமாறினார்.

ஒருவருக்கே வாய்ப்பு:
அதற்காக டி20 அணியிலிருந்து நீக்குமாறு கபில் தேவ், கெளதம் கம்பீர் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். ஆனால் எதற்கும் மனம் தளராமல் போராடிய அவர் 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் சதமடித்து அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடி அசத்தினார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக 31/4 என சரிந்த போது 82* ரன்கள் விளாசி வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடிய அவர் தாம் இன்னும் சோடை போகவில்லை என்பதையும் சாம்பியன் வீரர் என்பதையும் நிரூபித்தார்.

Virat Kohli Rohit Sharma

அதனால் அன்று இந்திய அணியிலிருந்து நீக்குமாறு சொன்ன விராட் கோலியை 2022ஆம் ஆண்டின் கனவு டி20 அணியில் தேர்வு செய்து ஐசிசி கௌரவித்தது. இந்நிலையில் வயதை வெறும் நம்பராக்கி அபாரமாக செயல்படும் விராட் கோலி 2024 டி20 உலக கோப்பையில் நிச்சயம் விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பில்லை என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

- Advertisement -

ஏனெனில் விராட் கோலியை விட டி20 கிரிக்கெட்டில் தடுமாறும் அவர் ஏற்கனவே 35 வயதை கடந்து விட்டதால் 2024இல் 37 வயதை தாண்டியிருப்பார் 2024 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மிகப்பெரிய டெஸ்ட் தொடர் வரவிருப்பதால் சமீபத்திய இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் என்று நம்பலாம்”

Jaffer

“அதைத்தொடர்ந்து ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பையும் நடைபெறுகிறது. இருப்பினும் வருங்காலத்தை பார்க்கும் போது டி20 கிரிக்கெட் என்பது இளைஞர்களுக்கானது. அந்த நிலையில் ரோகித் சர்மா அடுத்த டி20 உலக கோப்பையில் விளையாடுவதை நான் பார்க்கப் போவதில்லை என்று நம்புகிறேன். இருப்பினும் விராட் கோலி விளையாடலாம். ஆனால் ரோகித் சர்மா நிச்சயமாக அடுத்த உலகக் கோப்பையில் விளையாட மாட்டார். ஏனெனில் அவர் ஏற்கனவே 35 வயதை கடந்து விட்டார்”

இதையும் படிங்க:நீங்க அஷ்வினை எதிர்கொள்ள தயாராகுங்க, ஆனா அவர் சிலபஸ்க்கு வெளியே வரப்போறாரு – ஸ்மித்தை எச்சரித்த இர்பான் பதான்

“எனவே வளமான வருங்காலத்தை பார்ப்பது மிகவும் முக்கியமாகும். விரைவில் ஆஸ்திரேலியா போன்ற பெரிய தொடர்கள் நடைபெறுவதால் அவர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்காக இந்த ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். அவர் கூறுவது போல அடுத்த வரும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டாலுமே 37 வயதை தொட்டு விடுவார் என்பதால் 2024 டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement