நீங்க அஷ்வினை எதிர்கொள்ள தயாராகுங்க, ஆனா அவர் சிலபஸ்க்கு வெளியே வரப்போறாரு – ஸ்மித்தை எச்சரித்த இர்பான் பதான்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. மறுபுறம் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா 2004க்குப்பின் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்க போராட உள்ளது. மேலும் கடைசியாக தங்களது சொந்த மண்ணில் நடந்த அடுத்தடுத்த 2 டெஸ்ட் தொடர்களில் தோல்வியைப் பரிசளித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்த்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்கவும் ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.

Steve Smith Virat Kohli IND vs AUS

- Advertisement -

பொதுவாக இந்திய மண்ணில் எப்போதும் சுழல் பந்து வீச்சு அதிகமாக எடுபடும் என்பதால் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர்களை வைத்து விளையாட திட்டம் வகுத்துள்ள ஆஸ்திரேலியா பெரிய சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் அஷ்வினை வீழ்த்துவதற்கான திட்டங்களையும் வகுத்து வருகிறது. சொல்லப்போனால் அஷ்வினை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான திட்டங்களை பிக்பேஷ் தொடரின் போதே வகுத்து விட்டதாக மார்னஸ் லபுஸ்ஷேன், மாட் ரென்ஷா போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்தனர்.

சிலபஸ்க்கு வெளியே:
அத்துடன் அஷ்வின் போலவே பந்து வீசும் மகேஷ் பிதியா எனும் லோக்கல் பவுலரை தேடிப் பிடித்து அவருக்கு எதிராக தற்போது ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஆஸ்திரேலிய அணியினர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மொத்தத்தில் அஷ்வினை வீழ்த்துவதற்கு மொத்த ஆஸ்திரேலியா அணியினரும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அஷ்வினை சாய்ப்பதற்கான திட்டங்களை வகுத்தாலும் புத்தகத்துக்கு வெளியே அக்சர் பட்டேல் என்பவர் வந்து ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலை கொடுப்பார் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.

axar

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்திரேலியாவின் வரலாற்றை புரட்டினால் அவரது பெயர் நிச்சயமாக இருக்கும். மேலும் சமீப காலங்களில் அவர் இந்திய பவுலர்களுக்கு பெரிய தொல்லை கொடுத்து நிறைய ரன்களை அடித்துள்ளார். குறிப்பாக திடமான பின்னங்கையை கொண்டு விக்கெட்டுக்கு ஆஃப் மற்றும் லெக் சைட் திசையில் ரன்கள் அடிப்பதற்கான வழியை அவர் கொண்டுள்ளதால் நாம் அவருக்கு எதிராக சிறப்பான திட்டங்களை வகுக்க வேண்டும்”

- Advertisement -

“அவருக்கு இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. மேலும் அவருக்கு எதிராக இந்தியாவில் ஒருவர் மட்டும் மிகச் சிறப்பான புள்ளி விவரங்களை வைத்துள்ளார். அவர் தான் அக்சர் பட்டேல். அவர் மட்டும் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் விளையாடினால் நிச்சயமாக ஸ்டீவ் ஸ்மித்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். குறிப்பாக லைன், லென்த், ஸ்ட்ரைட் பந்துகள் போன்றவற்றால் ஸ்மித்துக்கு எதிராக அவரால் எல்பிடபிள்யு அல்லது போல்ட் எடுக்க முடியும். ஏனெனில் ஸ்மித் அதிகமாக பின்னங்கையை உபயோகிப்பவர். மேலும் ஸ்மித்துக்கு எதிராக ஸ்டம்ப் லைனில் யார் வீசினாலும் அவர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள். அது அக்சர் பட்டேலாக இருப்பார்” என்று கூறினார்.

pathan 1

அவர் கூறுவது போல கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகமான அக்சர் படேல் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அஷ்வினை விட அதிக விக்கெட்டுகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். மேலும் இதுவரை ஆஸ்திரேலிய அணியினர் அஷ்வினை எதிர்கொண்ட அளவுக்கு அக்சர் பட்டேலை பெரும்பாலும் எதிர்கொண்டதில்லை.

இதையும் படிங்க: வீடியோ : எப்புட்றா இருக்க? நம்பர் ஒன் பவுலர் சிராஜை பாராட்டி தமிழில் பேச வைத்த அஷ்வின் – முழுவிவரம் இதோ

அதனால் அவருடைய நுணுக்கங்களை ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதன் காரணமாக இந்த தொடரில் அக்சர் படேல் அவுட் ஆஃப் சிலபஸ் போல செயல்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு அச்சுறுத்தலை கொடுப்பார் என்று இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement