இப்போதைக்கு இந்தியாவை ரீபில்ட் பண்ணி சரியான வழி நடத்த ராகுல் டிராவிட் தான் தகுதியானவர் – தெ.ஆ ஜாம்பவான் மெகா ஆதரவு

dravid
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்தியா தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் மண்ணை கவ்வி நாடு திரும்பியுள்ளது. அந்த போட்டியில் ஆரம்பத்திலேயே டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் அதை சரியாக பயன்படுத்தாத இந்தியா தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்டு ஐபிஎல் தொடரில் விளையாடி முழுமையாக தயாராமல் களமிறங்கி பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சொதப்பலாக செயல்பட்டது தோல்வியை கொடுத்தது. மேலும் ஜாம்பவான்களாக போற்றப்படும் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பியது தோல்விக்கு காரணமானது.

TEam India Rohit Sharma

- Advertisement -

அதனால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் இடத்திலிருந்து என்ன பயன் என்று விமர்சிப்பதுடன் காலம் கடந்த நட்சத்திர சீனியர் வீரர்களை கழற்றி விட்டு புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். குறிப்பாக சமீப காலங்களாகவே பேட்டிங்கில் தடுமாற்றமாக செயல்படுவதுடன் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து இந்த ஃபைனலிலும் தோல்வியை சந்திக்கும் அளவுக்கு சுமாராக கேப்டன்ஷிப் செய்த ரோகித் சர்மா பதவி விலக வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

முக்கிய ஆதரவு:
அதற்கு நிகராக தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டும் பதவி விலக வேண்டுமென ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சொல்லப்போனால் ஒரு வீரராக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஜாம்பவனாக கொண்டாடப்படும் அவர் பயிற்சியாளராக அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 2007 உலகக்கோப்பை போல சோதனை முயற்சி என்ற பெயரில் அடிக்கடி மாற்றங்களை செய்வதையும் சிறப்பாக செயல்படும் வீரர்களை அடுத்த தொடரில் கழற்றி விடுவதையும் கேஎல் ராகுல் போன்ற சுமாராக செயல்படும் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ள அவர் அஸ்வின் போன்ற தரமான வீரரை ஃபைனல் போன்ற முக்கிய போட்டிகளில் சரியாக பயன்படுத்துவதில்லை.

dravid 1

அதை விட அடுத்தடுத்த ஃபைனல்களுக்கு தகுதி பெற்றதையும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருப்பதை பெருமையாக கருதும் அவர் தோல்விகளை பெரிதாக பார்ப்பதில்லை. மேலும் இங்கிலாந்து போன்ற அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 விளையாடும் நிலையில் அவரோ ட்ரா செய்தால் போதும் என்ற மனநிலையுடன் இந்திய அணியை நடத்துகிறார் என்றே சொல்லலாம். அதனால் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 உலக கோப்பையுடன் உங்களது சேவை போதும் என்று வெளிப்படையாகவே ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த சமயத்தில் இந்திய அணியை மறுசீரமைத்து சரியாக வழி நடத்த தரமான ராகுல் டிராவிட் தான் சிறந்தவர் என்று தெரிவிக்கும் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் விமர்சனங்களுக்கு மத்தியில் பெரிய ஆதரவு கொடுத்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட் அணியில் தலைமையில் இருப்பவர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால் என்னவெனில் பல்வேறு வகையான கிரிக்கெட்டுக்கு உங்களுடைய அணியையும் அட்டவணையையும் சமநிலைப்படுத்துவதாகும். அதுதான் ராகுல் மற்றும் இந்திய தேர்வுக்குழு எடுக்க வேண்டிய பெரிய முடிவாகும். குறிப்பாக எந்த மாதிரியான அணி தேவை அவர்களை எவ்வாறு வழி நடத்தலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்”

Graeme-Smith

“எனவே தரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தக்கூடிய தன்னை கொண்ட ராகுல் டிராவிட் பயிற்சிளாக தொடர்வதற்கு தகுதியானவர் என்பதை காண்பித்துள்ளார். அவருக்கு இந்திய அணியை மீண்டும் சீரமைத்து வெற்றிகரமாக வழி நடத்துவதற்கான நியாயமான வாய்ப்பை கொடுங்கள்” என்று கூறினார். அத்துடன் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டால் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் அழுத்தம் காணாமல் போய் இந்தியா வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்றும் கிரேம் ஸ்மித் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Ashes 2023 : ஆரம்பத்துலயே இப்டியா ஆகணும்? பெரிய தண்டனை வழங்கிய ஐசிசி – ஆஸியை இங்கிலாந்துக்கு மெகா பின்னடைவு

குறிப்பாக ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் ஸ்டைலில் எந்த குறையும் இல்லை என்று தெரிவிக்கும் அவர் பேட்டிங்கில் முன்னேற்றத்தைக் கண்டு நல்ல ரன்களை எடுத்தால் அவரது தலைமையில் இந்தியா தாமாகவே வெற்றி நடை போடும் என்றும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement