Ashes 2023 : ஆரம்பத்துலயே இப்டியா ஆகணும்? பெரிய தண்டனை வழங்கிய ஐசிசி – ஆஸியை இங்கிலாந்துக்கு மெகா பின்னடைவு

ENg vs AUS
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் துவங்கிய நூற்றாண்டு பழமை வாய்ந்த 2023 ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் கடைசி நாளில் கடைசி மணி நேரத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது. பர்மிங்கம் நகரில் ஜூன் 16ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அதிரடியாக செயல்பட்டு 393/3 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே டிக்ளர் செய்து எக்ஸ்ட்ராவாக 40 – 50 ரன்கள் எடுக்கும் வாய்ப்பை தவற விட்டது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோ ரூட் 118* ரன்களும் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேத்தன் லயன் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா சதமடித்து 141 ரன்கள் குவித்த உதவியுடன் 386 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் வெறும் 7 ரன்கள் முன்னிலுடன் களமிறங்கிய இங்கிலாந்து கொஞ்சமும் பொறுப்புடன் செயல்படாமல் மீண்டும் அதிரடியாகவே விளையாடுவோம் என்று அடம் பிடித்து வெறும் 273 ரன்களுக்கு சுருண்டு 300 ரன்களை கூட இலக்காக நிர்ணயிக்காதது தோல்விக்கு மற்றொரு காரணமானது.

- Advertisement -

ஐசிசி தண்டனை:
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோ ரூட் மற்றும் ஹரி ப்ரூக் ஆகியோர் தலா 46 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் மற்றும் நேதன் லயன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதியில் 281 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் 36, ஸ்மித் 6, லபுஸ்ஷேன் 6, டிராவிஸ் ஹெட் 16, அலெக்ஸ் கேரி 20, க்ரீன் 28 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர். இருப்பினும் மீண்டும் நங்கூரமாக செயல்பட்ட உஸ்மான் கவாஜா 65 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி நேரத்தில் கேப்டன் பட் கமின்ஸ் 44* ரன்களும் நேதன் லயன் 16* ரன்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர்.

முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் ஃபைனல் 2021ஆம் ஆண்டு இந்தியாவை தோற்கடித்து நியூஸிலாந்து கோப்பையை வென்றதுடன் முடிந்தது. அதைத்தொடர்ந்து 2021ஆம் ஆண்டு துவங்கப்பட்ட 2வது தொடரின் மாபெரும் ஃபைனல் சமீபத்தில் இதே இங்கிலாந்தில் லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பையை வென்றதுடன் நிறைவு பெற்றது.

- Advertisement -

அந்த நிலையில் அடுத்ததாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைத் தொடர் இந்த இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து துவங்கியுள்ளது. அடுத்த 2 வருடம் பல்வேறு நாடுகளில் நடைபெறும் இத்தொடரின் மாபெரும் ஃபைனல் மீண்டும் வரும் 2025 ஆம் ஆண்டு லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த வகையில் 3வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் இரு அணிகளுமே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்கவில்லை என நடுவர் ஆண்டி பைகிராப்ஃட் புகார் கொடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட ஐசிசி 2 அணிகளுக்கும் இந்த போட்டியின் சம்பளத்திலிருந்து தலா 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. அந்த தண்டனையுடன் இந்த போட்டியில் இரு அணிகளும் பெற்ற மொத்த புள்ளிகளில் தலா 2 புள்ளிகள் கழிக்கப்படுவதாகவும் ஐசிசி அதிரடியாக தெரிவித்துள்ளது. அதன் காரணமாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்த வெற்றியால் கிடைத்த 12 புள்ளிகளில் 2 இழந்துள்ள ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.

இதையும் படிங்க:Ashes 2023 : ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது, அதீத தைரியத்தால் டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து – பரிதாபமான உலக சாதனை

ஆனால் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து மைனஸ் 2 புள்ளிகளை பெற்று ஆரம்பத்திலேயே இத்தொடரில் பின்னடைவு சந்தித்துள்ளது. சொல்லப்போனால் தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் 2 ஃபைனல்களுக்கு தகுதி பெறாத இங்கிலாந்து தற்போது முன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடி பாதையில் நடப்பதால் 2025 ஃபைனலில் விளையாடுமென்று அந்நாட்டு ரசிகர்கள் நம்புகின்றனர். இருப்பினும் அதிரடி என்ற பெயரில் அதீத தைரியத்தால் இங்கிலாந்து இப்போட்டியில் வெற்றியை நழுவ விட்டது விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில் இப்படி முதல் போட்டியிலேயே புள்ளி பட்டியலில் மைனஸ் புள்ளிகளை பெற்றுள்ளது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement