விராட் கோலி எங்க டீம்ல இல்லையேனு ஆதங்கப்படுகிறோம், நீங்க விமர்சிக்கிறீங்களே – இந்தியர்களுக்கு இங்கி வீரர் கோரிக்கை

INDvsENG
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 12-ஆம் தேதியன்று லண்டனில் துவங்குகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நிகழ்ந்த 5-வது டெஸ்ட் போட்டியில் வென்று 2 – 2 (5) என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சமன் செய்த இங்கிலாந்துக்கு அடுத்ததாக நடந்த டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்று பதிலடி கொடுத்தது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி இதுவரை பங்கேற்ற 4 இன்னிங்சிலும் அரைசதம் கூட அடிக்காமல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

Virat kohli Shubman Gill

- Advertisement -

ஜாம்பவான் சச்சினுக்கு பின் அவரைப் போலவே ரன் மெஷினாக ஏராளமான ரன்களையும் 70 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ள அவர் கடைசியாக கடந்த 2019ல் சதம் அடித்திருந்தார். அதன்பின் கடந்த 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 100 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தவித்து வரும் அவர் அதற்காக விமர்சனங்களை தினந்தோறும் வாங்கி கட்டிக் கொண்டு வருகிறார்.

தினம்தோறும் விமர்சனம்:
பொதுவாக தரமான கிரிக்கெட் வீரர்களும் மனிதர்களே என்ற நிலைமையில் தொடர்ச்சியாக ரன்களை அடிக்க முடியாமல் எப்போதாவது பார்மை இழப்பார்கள். இருப்பினும் தரமான வீரர்களுக்கு பார்ம் தற்காலிகமானது கிளாஸ் நிரந்தரமானது என்ற வல்லுனர்களின் கூற்றுப்படி ஒருவர் இழந்த பார்மை 6 மாதங்கள் அல்லது 1 வருடம் தப்பினால் 2 வருடங்களுக்குள் மீட்டெடுப்பது வழக்கமான ஒன்றாகும். வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் உட்பட அத்தனை வீரர்களும் இதுபோன்ற வீழ்ச்சியை சந்தித்து அதிலிருந்து மீண்டெழுந்து ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளனர். ஆனால் 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் இருப்பதாலேயே பொறுமை இழந்த அத்தனை பேரும் விராட் கோலி மீது தினம்தோறும் விமர்சனங்கள் என்ற பெயரில் கேள்விகளை அம்புகளாக தொடுக்கின்றனர்.

Kohli

இத்தனைக்கும் எத்தனையோ பேட்ஸ்மேன்கள் 30, 50 சதங்களை அடிப்பதற்கே திணறும் நிலையில் ஏற்கனவே 70 சதங்கள் அடித்துள்ள அவர் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பின் 3வதாக நிற்கும் போதிலும் அனைவரும் விமர்சிக்கின்றனர். மேலும் இடையிடையே 50, 70 போன்ற நல்ல ரன்களை அவர் எடுத்தாலும் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆரம்ப காலங்களில் அபாரமாக செயல்பட்டு களமிறங்கினாலே சதமடிப்பார் என்ற வகையில் தனக்கென்ற ஒரு தரத்தை ஏற்படுத்தியதே தற்போது அவரின் இந்த நிலைமைக்கு காரணமாகும்.

- Advertisement -

பாராட்டும் வெளிநாட்டவர்கள்:
கடந்த சில வருடங்களில் விராட் கோலி எப்போது சதமடிப்பார் என்று பேசி வந்த ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் ஊடகங்களும் தற்போது விராட் கோலியை அணியில் இருந்து நீக்க வேண்டுமென பேசத் துவங்கியுள்ளனர். அதிலும் பெரிய பெயரை வைத்துக்கொண்டு ரன்கள் அடிக்காமல் எத்தனை நாட்கள் இந்திய அணியில் விளையாடுவீர்கள் என்று ஜாம்பவான் கபில் தேவ் கேள்வி எழுப்பியது புயலை கிளப்பியுள்ளது. ஆனால் அவரின் திறமையை உணர்ந்த சில வெளிநாட்டவர்கள் இப்போதும் ஆதரவு கொடுத்தே வருகிறார்கள்.

kohli

அந்த வகையில் விராட் கோலி இங்கிலாந்தில் விளையாடினால் இவ்வளவு விமர்சனங்களைச் சந்திக்க மாட்டார் என தெரிவிக்கும் அந்நாட்டின் முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் ஏற்கனவே பெரிய ரன்களை எட்ட முடியாமல் தவிக்கும் அவர் மீது இந்திய ஊடகங்களும் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விமர்சனம் என்ற பெயரில் மேற்கொண்டு அழுத்தத்தை போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒருவேளை எங்களுக்கு அவரைப் போன்ற ஒரு சிறந்த வீரர் கிடைத்திருந்தால் அவர் ஆங்கிலேயராக இருந்திருந்தால் நான் ஆங்கில ஊடகத்தில் இருந்திருந்தால் நாங்கள் அவரை சுதந்திரமாக செயல்பட விட்டிருப்போம். எங்களது ஸ்டார் வீரருக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டாம் என்று நான் கூறுவேன். அவர் மீது தேவையற்ற அழுத்தத்தை கொடுக்காமல் இருந்தாலே சிறப்பாக செயல்படுவார்”

Graeme-Swann-and-Virat-Kohli

“ரசிகர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து வரும் அழுத்தங்கள் ஒரு வீரருக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அவருக்கு ஆதரவளித்து அவருடைய மோசமான தருணத்தை எளிதாக்க முயற்சியுங்கள். நீங்கள் உங்களது அணியில் விராட் கோலி மேற்கொண்டு விளையாட விரும்பவில்லை எனில் இதேபோல தொடர்ச்சியாக விமர்சனத்தையும் அழுத்தத்தையும் கொடுத்துக்கொண்டே இருங்கள்.

இதையும் படிங்க : வரலாற்றில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி அறிவிப்பு – அட்டவணை, முழுவிவரம் இதோ

மாறாக அவரை நீங்கள் ஒரு தரமான வீரராக சொத்தாக நினைத்தால் விமர்சனத்தை விட்டு எளிதாக செயல்பட வழி விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

Advertisement