ட்விட்டரில் இருப்பதை விட்டுவிட்டு ஆட்டத்தில் கவனத்தை செலுத்துங்கள் – இந்திய வீரருக்கு கிரேம் ஸ்மித் அட்வைஸ்

Graeme-Smith
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரினை தொடர்ந்து சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் ரிஷப் பண்ட் தலைமையிலான இளம் இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. அதனை தொடர்ந்து சீனியர் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜூலை 1-ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வேளையில் மற்றொரு இளம் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

Keshav-Maharaj-and-Rishabh-Pant

- Advertisement -

இந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை ஏற்கனவே பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. அதில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இங்கிலாந்து சென்று முதன்மை அணியுடன் இணைய உள்ளதால் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ராகுல் திவாதியாவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன.

Tewatia

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் அவரது செயலை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் தற்போது திறமையான பல வீரர்கள் இருப்பதால் தற்போது இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் வீரர்களுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருவதால் ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்படும் வகையில் போட்டி போட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே வேளையில் டிராவிட் மற்றும் ரோகித் ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்வு செய்யும் கவனத்தில் இருப்பதால் வீரர்கள் அனைவரும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : IND vs RSA : போராட்டத்தின் பலன். தொடர் சமனில் முடிந்தாலும் ஆஸியை முந்தி உலகசாதனை படைத்த இந்தியா

இந்திய அணிக்கு ராகுல் திவாதியா தேர்வாகாதது வருத்தம் தான். இருப்பினும் அவர் டுவிட்டரில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு தனது இலக்கை நோக்கி கவனம் செலுத்தினால் நிச்சயம் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று மறைமுகமாக அவரை கிரேம் ஸ்மித் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement