IND vs RSA : போராட்டத்தின் பலன். தொடர் சமனில் முடிந்தாலும் ஆஸியை முந்தி உலகசாதனை படைத்த இந்தியா

Keshav-Maharaj-and-Rishabh-Pant
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் இந்தியா தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 – 2 என சமனில் நிறைவு பெற்றது. கடந்த ஜூன் 9இல் டெல்லியில் துவங்கிய இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா 12 தொடர் வெற்றிகளுடன் உலக சாதனை படைத்து வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவுக்கு சொந்த மண்ணில் வரலாற்று தோல்வியை பரிசளித்தது. அதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான இந்திய அணியினர் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையிலும் மீண்டெழுந்து பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கச்சிதமாக செயல்பட்டு அடுத்த 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்றனர்.

INDvsRSA

- Advertisement -

அதிலும் ராஜ்கோட்டில் நடந்த 4-வது போட்டியில் 87 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவை குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்ய வைத்து பதிலுக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்து தக்க பதிலடி கொடுத்தது. அதனால் சொந்த மண்ணில் எப்போதுமே நாங்கள் கில்லி தான் என்று தென் ஆப்பிரிக்காவுக்கு காட்டிய இந்தியா தொடரை சமன் செய்து கொதித்தெழுந்தது.

வீணான போராட்டம்:
அந்த நிலைமையில் இந்த பரபரப்பான தொடரின் முக்கியமான கடைசி போட்டி ஜூன் 19-ஆம் தேதி இரவு 7 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் துவங்கியது. அதில் கடந்த போட்டியில் காயமடைந்த பவுமாவுக்கு பதில் தென் ஆப்பிரிக்க கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேசவ் மகாராஜ் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்க காத்திருந்த இந்தியாவை மழை தடுத்தது.

IND vs RSA Rishabh Pant Keshav Maharaj

அதனால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டி மீண்டும் 7.50 மணிக்கு துவங்கிய போது இஷான் கிசான் 15 (7) ருதுராஜ் 10 (12) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 3.3 ஓவரில் 28/2 என இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தபோது மீண்டும் ஜோராக வந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேல் கொட்டி தீர்த்தது. அதனால் மைதானம் முழுவதும் தண்ணீரை நிரப்பிய மழை 10.10 மணிவரை நீடித்ததால் வேறு வழியின்றி போட்டி ரத்து செய்யப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். அதன் காரணமாக இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து கொள்ளப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்த தொடரில் அடுத்தடுத்த தோல்விகளுக்கு பின் கண்ட எழுச்சியின் பயனாக இறுதிப் போட்டியிலும் வென்று கெத்தாக இந்தியா கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பு மழையால் வீணானது. அத்துடன் இதுவரை சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டி20 தொடரை கூட வெல்லாத இந்தியா இம்முறை அந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க கிடைத்த பொன்னான வாய்ப்பும் மழையால் பறிபோனது. ஏனெனில் 2015இல் 2 – 1 (3) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் தோற்ற எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா 2019இல் விராட் கோலி தலைமையில் 1 – 1 (3) என்ற கணக்கில் டிரா மட்டுமே செய்திருந்தது.

indvsaus

புதிய உலகசாதனை:
இதனால் சற்று ஏமாற்றமடைந்த ரசிகர்களை மகிழ்ச்சியடையும் வகையில் இந்தியா சத்தமில்லாமல் ஒரு உலக சாதனையும் படைத்துள்ளது. ஆம் இந்த தொடரை டிரா செய்ததன் வாயிலாக “சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் அதிக தொடர்களில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி அல்லது ட்ரா செய்த அணி” என்ற ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை தகர்த்த இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

1. இதற்குமுன் கடந்த 2006 – 2010 காலகட்டத்தில் சொந்த மண்ணில் 8 டி20 தொடர்களில் தோல்வியே பதிவு செய்யாமல் வெற்றி அல்லது ட்ரா செய்திருந்த ஆஸ்திரேலியா அந்த உலக சாதனையை இதுநாள் வரை தன் வசம் வைத்திருந்தது.

Ind-vs-aus-1

2. ஆனால் கடந்த 2019இல் இதே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 1 – 1 (3) என்ற கணக்கில் டிரா செய்த இந்தியா வங்கதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த 4 டி20 தொடர்களை வென்றது.

- Advertisement -

3. அதன்பின் கடந்த நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட 3 டி20 தொடரில் இந்தியா வென்றது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து தற்போது 2 – 2 என சமன் செய்துள்ள இந்தியா கடந்த 9 டி20 தொடர்களில் தோல்வியே அடையாமல் 7 வெற்றிகளையும் 2 ட்ரா பதிவு செய்து ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க : IND vs RSA : ரிஷப் பண்ட் இதை செய்தால் கில்கிறிஸ்ட் மாதிரி வருவார் – சஞ்சய் பாங்கர் ஆதரவு

4. இதற்குமுன் அதிகபட்சமாக கடந்த 2016 – 2018 காலகட்டத்தில் 6 தொடர்களில் தொடர்ச்சியாக வென்று வந்த இந்தியாவை 2019இல் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா தோற்கடித்து தடுத்து நிறுத்தியது. ஆனால் அதன்பின் விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோரின் தலைமையில் மீண்டும் வெற்றி நடையை துவங்கிய இந்தியா தற்போது இந்த புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

Advertisement