37 வயசான அவரால ஒன்னும் முடியாது.. இந்தியாவை சாய்க்க இங்கிலாந்துக்கு கோல்டன் சான்ஸ் கிடைச்சுருக்கு.. ஜெஃப்ரி பாய்காட் 

Geoffery Boycott
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத் நகரில் தொடங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக முதல் 3 நாட்கள் திணறிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஓலி போப் 196 ரன்கள் குவித்த உதவியுடன் தப்பிய இங்கிலாந்துக்கு 2வது இன்னிங்ஸில் டாம் ஹார்ட்லி 7 விக்கெட்களை எடுத்து இந்தியாவை 202 ரன்களுக்கு சுருட்டி மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அந்த வகையில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று தொடர் துவங்குவதற்கு முன்பே எச்சரித்த இங்கிலாந்து தற்போது அதை செயலில் காட்ட துவங்கியுள்ளது.

- Advertisement -

கோல்டன் சான்ஸ்:
இந்நிலையில் 37 வயதை கடந்து விட்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா பெரிய ரன்களை அடித்து வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் காலத்தை கடந்து விட்டதாக முன்னாள் இங்கிலாந்து ஜாம்பவான் வீரர் ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார். அத்துடன் விராட் கோலி, ஷமி, ஜடேஜா, ராகுல், ரிஷப் பண்ட் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாததால் பலத்தில் ஒன்றுமில்லாமல் தடுமாறும் இருக்கும் இந்தியாவை தோற்கடிக்க இங்கிலாந்துக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி டெலிகிராப் இணையத்தில் அவர் எழுதியுள்ளது பின்வருமாறு. “ஏறத்தாழ 37 வயதாகும் அவர்களின் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய சிறந்த காலத்தை கடந்து விட்டார். அவர் அழகான சிறிய இன்னிங்ஸ்களை விளையாடுகிறார். ஆனால் அவர் சொந்த மண்ணில் கடந்த 4 வருடங்களில் 2 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்தியா களத்தில் பலவீனமாக செயல்படுகின்றனர்”

- Advertisement -

“எனவே இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடிப்பதற்கு இங்கிலாந்துக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார்கள். அதனால் இந்தியா சொந்த மண்ணில் தோற்பதற்கான சூழல் உள்ளது. குறிப்பாக விராட் கோலி, ஜடேஜா, ஷமி, ரிஷப் பண்ட் போன்றவர்கள் இல்லாதது இங்கிலாந்தின் வெற்றிக்கான அறிகுறியை காண்பிக்கிறது”

இதையும் படிங்க: ரோஹித் நல்லா சிக்கிட்டாரு.. விராட் கோலி இருந்திருந்தா கதையே வேற.. மான்டி பனேசர் கருத்து

“ஏற்கனவே முதல் போட்டியில் மகத்தான வெற்றி பெற்றதால் இங்கிலாந்து முழுமையான தன்னம்பிக்கையை கொண்டுள்ளது. எனவே இங்கிலாந்து இந்த அரிதான வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவை தோற்கடிக்க வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் 2வது போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement