அடுத்ததா அந்த புள்ள பூச்சி டீமை அடிச்சு சாதனை படைச்சுட்டு வாங்க – இந்திய அணியை ஓப்பனாக சாடிய கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதிப்போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக கடந்த ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக தோற்ற இந்தியா இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மண்ணை கவ்வி 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் கோப்பையை வெல்லாமல் வெறும் கையுடன் நாடு திரும்பியது. இத்தனைக்கும் தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் அஸ்வின் போன்ற வீரரை கழற்றி விட்டு சரியான அணியைத் தேர்வு செய்யாததும் ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு முழுமையாக தயாராகாமல் நேரடியாக ஃபைனலில் களமிறங்கியதும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

அது போக பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதும் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட ஜாம்பவான்களாக போற்றப்படும் வீரர்கள் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பியதும் தோல்வியை கொடுத்தது. இது மட்டுமல்லாமல் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் கடந்த வருடம் இதே போல இருதரப்பு தொடர்களில் அசத்தி நம்பர் ஒன் அணியாக முன்னேறியும் அழுத்தமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் ரோகித் சர்மா பதவி விலக வேண்டும் எனவும் காலம் கடந்த புஜாரா போன்ற வீரர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கொந்தளிக்கின்றனர்.

புள்ள பூச்சிய அடிங்க:
இந்த நிலையில் நாடு திரும்பியுள்ள இந்தியா அடுத்ததாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடுவதாக இருந்த ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டது. எனவே அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. குறிப்பாக ஜூலை 12ஆம் தேதி தான் அந்த தொடர் துவங்குவதால் நீண்ட நாட்கள் கழித்து சுமார் ஒரு மாதம் இந்திய அணியினர் ஓய்வெடுக்க உள்ளனர்.

IND vs WI Nicholas Pooran Rohit Sharma

இந்நிலையில் அந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் பலவீனமாக இருப்பதால் வழக்கம் போல 3 வகையான தொடர்களிலும் உங்களது முரட்டுத்தனத்தை காட்டி வைட்வாஷ் வெற்றிகளை பற்றி சாதனைகளைப் படைத்து வீரத்தை காட்டுங்கள் என ஃபைனலில் தோற்ற விரக்தியில் இந்திய அணியை சுனில் கவாஸ்கர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எங்களது காலத்தில் முக்கிய தொடர்களில் நாக் அவுட் செய்யப்பட்ட இந்திய அணியில் நானும் இருந்தேன். அப்போது நாங்கள் பெரிய மாற்றங்களை செய்ய வேண்டிய நிலைமையில் இருந்தோம். நாங்களும் அதிகப்படியான விமர்சனங்களை சந்தித்தோம். எனவே தற்போதைய அணி மட்டும் அதிகப்படியான விமர்சனங்களை சந்திக்கிறது என்று நீங்கள் சொல்ல முடியாது. சொல்லப்போனால் எப்படி அவுட்டானோம், ஏன் சிறப்பாக பவுலிங் செய்யவில்லை, ஏன் சிறப்பாக கேட்ச் பிடிக்கவில்லை, சரியான 11 பேர் அணியை தேர்வு செய்தோமா என்பது போன்ற காரணிகளை தெரிந்து கொள்ள தற்போதைய அணிக்கு நவீன டெக்னாலஜியின் உதவி அதிகமாகவே இருக்கிறது”

Gavaskar

“அதனால் இந்த தோல்வியை அப்படியே தூக்கி எறிந்து விட்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு சென்று 2 போட்டியில் விளையாடுவோம் என்று நீங்கள் நினைக்க முடியாது. மேலும் தற்போதைய நிலைமையில் வெஸ்ட் இண்டீஸ் உலகின் சிறந்த அணியாக இல்லை. அதனால் அங்கே நீங்கள் சென்று எந்த வகையான தொடராக இருந்தாலும் அடித்து நொறுக்கி 2 – 0, 3 – 0 என்ற கணக்கில் வெல்லப் போகிறீர்கள். ஆனால் இது எதையும் குறிக்காது”

இதையும் படிங்க:ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இவருக்கே அதிக வாய்ப்பு – பி.சி.சி.ஐ பிளான்

“ஏனெனில் நீங்கள் மீண்டும் ஃபைனலுக்கு சென்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி அதே தவறுகளை செய்தால் எப்படி கோப்பையை வெல்வீர்கள்? குறிப்பாக விராட் கோலி அந்த போட்டியில் அதே அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் அவுட்டானார். ஒருவேளை அவர் 49 ரன்களில் இருந்ததால் 1 ரன்னை அவ்வாறு அடித்து அரை சதமடிக்கலாம் என்று நினைத்திருக்கலாம். நீங்கள் சாதனைக்காக விளையாடும் போது அவ்வாறு நடைபெறும்” என்று கூறினார்.

Advertisement