ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இவருக்கே அதிக வாய்ப்பு – பி.சி.சி.ஐ பிளான்

rohith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து ரோகித் சர்மாவின் கேப்டன்சி மீது அதிக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. 36 வயதான ரோஹித் சர்மா இனியும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் தொடர்வாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Rohit-Sharma

- Advertisement -

அதனை தொடர்ந்து அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அங்கு நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரானது கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே இரண்டு முறை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று முடிந்த வேளையில் மூன்றாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான சுற்று வரும் ஜூலை மாதத்தில் இருந்து துவங்குகிறது. எனவே 36 வயதான ரோஹித் சர்மா அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முழுவதும் விளையாட முடியுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

Joe Root Jonny Bairstow Rishabh Pant IND vs ENg

அதன் காரணமாக அடுத்த தொடரோடு பிசிசிஐ ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் நீக்கலாம் என்று தெரிகிறது. அதற்கு முன்னதாகவே ரோகித் சர்மாவே முன்வந்து ராஜினாமா செய்ய உள்ளார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

அப்படி ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ அடுத்ததாக யார் இந்திய அணியின் கேப்டனாக செயல்படப்போகிறார்கள் என்பது குறித்த கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இன்னும் சிறிதுகாலம் கேப்டனாக நீடிப்பார் என்றும் ஒருவேளை அதற்குள் ரிஷப் பண்ட் முழு உடற்தகுதி பெற்று இந்திய அணிக்கு திரும்பினால் அவரே அடுத்த டெஸ்ட் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : இந்தியா மட்டுமல்ல. டெஸ்ட் கிரிக்கெட்டே ஒரு மகத்தான கேப்டனை இழந்துவிட்டது – இயான் மோர்கன் கருத்து

டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அற்புதமான பார்மில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் அவர் கேப்டனாக செயல்பட ஆதரவும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement