இந்தியா மட்டுமல்ல. டெஸ்ட் கிரிக்கெட்டே ஒரு மகத்தான கேப்டனை இழந்துவிட்டது – இயான் மோர்கன் கருத்து

Eoin-Morgan
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததிலிருந்து ரோகித் சர்மாவின் கேப்டன்சியின் மீது பெரிய அளவில் விமர்சனம் எழுந்துள்ளது. அதோடு விராட் கோலியே இந்திய டெஸ்ட் அணிக்கு தொடர்ந்து கேப்டனாக செயல்பட்டு இருக்கலாம் என்ற கருத்துக்களும் நிலவி வருகிறது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி 68 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 40 போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ளார்.

IND

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை இந்திய அணியின் அணுகுமுறையை மாற்றியவர் என்ற பெருமை விராட் கோலியை தான் சேரும். ஏனெனில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் டிராவை நோக்கி செல்லக் கூடாது, வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என அணியில் ஒரு அட்டாக்கிங் அணுகுமுறையை கொண்டு வந்தவர் அவர்.

அதோடு பேட்டிங் மற்றும் பவுலிங் என அணியில் இரண்டு துறையிலும் ஒரு அட்டாக்கிங் அணுகுமுறையை கொண்டு வந்த அவர் இந்திய அணியை நம்பர் 1 இடத்திற்கும் கொண்டு வந்தார். அதேபோன்று அவரது கேப்டன்சியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணியும் உலக அணிகளை அச்சுறுத்தும் வகையில் மிகவும் பலமாக மாறியது.

Siraj

வெளிநாட்டு தொடர்களில் அடுத்தடுத்து பல்வேறு வெற்றிகளை பெற்ற இந்திய அணி அவரது தலைமையில் அடுத்த கட்டத்திற்கு சென்றது என்று கூறலாம். ஆனால் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு பின்னர் கோலியே அவரது டெஸ்ட் கேப்டன் பதிவை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு பிறகு விராட் கோலி குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் :

- Advertisement -

என்னை பொருத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் நம்ப முடியாத வகையில் சிறப்பாக இருந்து வருகிறது. உண்மையிலேயே டெஸ்ட் கிரிக்கெட் சவாலான நேரத்தை தரக்கூடியது. டெஸ்ட் கிரிக்கெட் ஒரு கேப்டனாக விராட் கோலி இழந்துவிட்டது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை எவ்வளவு நேசித்தார் என்பதும் அதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பதை பற்றி அவரே பலமுறை பேசியுள்ளார் என மோர்கன் கூறினார்.

இதையும் படிங்க : CSK : வித்தியாசமான முறையில் நிச்சயதார்த்தை முடித்த துஷார் தேஷ்பாண்டே – அவரது வருங்கால மனைவி யார் தெரியுமா?

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இங்கிலாந்து அணி கேப்டனான பென் ஸ்டோக்ஸ் தற்போது விராட் கோலி போன்ற ஒரு ஆக்ரோஷமாக கேப்டனாக இருந்து வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இங்கிலாந்து அணியை கிட்டத்தட்ட ஐந்து ரன்கள் ரன் ரேட்டுடன் விளையாட வைக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டிராவை பற்றி சிந்திக்காமல் வெற்றியை நோக்கி மட்டுமே நகர்ந்து கொண்டிருக்கிறார். விராட் கோலி, ஸ்டோக்ஸ் போன்ற அட்டாக்கிங் கேப்டன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை இன்னும் சுவாரஸ்யம் ஆக்குகின்றனர் என இயான் மோர்கன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement