
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் இருந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியானது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்தது. மற்றபடி வெற்றிகரமாக இறுதிப்போட்டி வரை வந்துள்ளது.
இதன் காரணமாக மார்ச் 8-ஆம் தேதியான நாளை அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியிலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே அகமதாபாத் நகரை சென்றடைந்த இந்திய அணியானது அங்கு இந்த மாபெரும் இறுதி போட்டிக்கு முன்னதாக தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இந்த மாபெரும் இறுதி போட்டியில் விளையாட இருக்கும் நியூசிலாந்து அணியை சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டரான கிளன் பிலிப்ஸ் நாளைய இந்த இறுதி போட்டியில் மட்டும் பும்ராவுக்கு மோசமான நாளாக அமைய வேண்டும் என்று தனது வேண்டுகோளை முன் வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
பும்ரா ஒரு மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் அவரிடம் பலவிதமான பந்துவீச்சு திறன் உள்ளன. கடைசி கட்ட ஓவர்களில் பிளாக் ஹோல் யார்க்ர்கர் வகை பந்துகளை வீசும் பும்ரா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரும் ஒரு மனிதர் தான் என்பதை நாம் அறிவோம். எனவே மற்றவர்களை போன்று அவருக்கும் ஒரு மோசமான நாள் அமையலாம். அந்த நாள் இறுதிப் போட்டியாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன் என கூறினார்.
இதையும் படிங்க : இந்த 3 பேரில் ஒருத்தர்தான் டி20 உலககோப்பை தொடரின் தொடர்நாயகன் – ரஹானே கணிப்பு
இதற்கு காரணம் யாதெனில் : பும்ரா போட்டியின் எந்த ஒரு கட்டத்திலும் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி எதிரணியிடம் இருந்து வெற்றியை பறிக்கக் கூடியவர். அதன் காரணமாகவே அவருக்கு ஒருநாள் மோசமாக அமைய வேண்டும் என்றும் இந்த இறுதி போட்டியை நாங்கள் கைப்பற்ற வேண்டும் என்றும் கிளென் பிலிப்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.