இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது மார்ச் 8-ம் தேதியான நாளை அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கும் வேளையில் இவ்விரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். நாளைய இந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தொடர்நாயகன் விருதினை வெல்ல வாய்ப்புள்ள 3 பேர் : ரஹானே கணிப்பு
நாளைய இந்த இறுதிப்போட்டியில் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வெல்லப்போவது யார்? ஒட்டுமொத்தமாக இந்த தொடருக்கான தொடர்நாயகன் விருதினை வெல்லப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதுகுறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் அஜிங்க்யா ரஹானே இந்த தொடரின் தொடர் நாயகன் குறித்த தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான தொடர் நாயகன் விருதினை வெல்ல வாய்ப்புள்ள மூன்று வீரர்களை தேர்வு செய்துள்ளேன். அதில் முதலிடம் பிடித்தவர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே அவர் சிறப்பாக பந்துவீசியுள்ளார். இந்திய அணியின் வெற்றிகளில் அவரது பங்களிப்பு என்பது அற்புதமான ஒன்று. எனவே அவரை தொடர்நாயகன் விருதுக்காக தேர்வு செய்துள்ளேன்.
அடுத்ததாக அரையிறுதி போட்டியுடன் தென்னாப்பிரிக்க அணி வெளியேறி இருந்தாலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி இங்கிடியின் செயல்பாடு இந்த தொடரில் பிரமாதமாக இருந்தது. எனவே அவரை இரண்டாவது தேர்வாக முடிவு செய்துள்ளேன். மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் உள்ளார்.
இதையும் படிங்க : என் வாழ்நாளில் மிகச்சிறந்த தருணம்.. அபிஷேக் சர்மாவும் அசத்துவார் – சஞ்சு சாம்சன் ஆதரவு
ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே அவர் பேட்டிங்கில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார் என்று இவர்கள் மூவரையும் தொடர்நாயகன் விருதுக்கான போட்டிக்கு தேர்வு செய்துள்ளதாக அஜின்க்யா ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.



