- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்தியாவை சமாளிச்ச இங்கிலாந்தை 5 – 0ன்னு ஆஷஸ்ல ஆஸி தெறிக்க விடும்.. 2 காரணம் இதான்.. மெக்ராத் கணிப்பு

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடருக்கு முன்பாக விராட், ரோஹித், அஸ்வின் ஆகியோர் ஓய்வு பெற்றார்கள். அதனால் அத்தொடரில் இளம் இந்திய அணியை இங்கிலாந்து எளிதாக தோற்கடிக்கும் என்று மைக்கேல் வாகன், கிரேம் ஸ்வான் போன்ற முன்னாள் வீரர்கள் கணித்தார்கள்.

ஆனால் ஆரம்பம் முதலே இங்கிலாந்துக்கு பெரிய சவாலைக் கொடுத்த இளம் இந்திய அணி என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றில் மறக்க முடியாத மிராக்கிள் வெற்றியைப் பெற்றது.

- Advertisement -

ஆஷஸ் தொடரில் ஒய்ட்வாஷ்:

மறுபுறம் இளம் இந்திய அணியை முழுமையாக சமாளிக்க முடியாத இங்கிலாந்து மிகவும் போராடிக் கோப்பையை பகிர்ந்து கொண்டது. மேலும் 2018க்குப்பின் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 3வது முறையாக இங்கிலாந்து ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் ஏமாற்றத்தைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இங்கிலாந்து அங்கு வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது.

என்ன தான் கிரிக்கெட்டை கண்டுபிடித்திருந்தாலும் பலமான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து வரலாற்றில் குறைவான வெற்றிகளை மட்டுமே கண்டுள்ளது. சொல்லப்போனால் 2010 – 11 ஆஷஸ் கோப்பையை 3 – 1 என்ற கணக்கில் ஆண்ட்ரூ ஸ்டார்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா மண்ணில் வென்றது. அதன் பின் ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து வெறும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்லவில்லை”

- Advertisement -

மெக்ராத் கணிப்பு:

இந்நிலையில் அடுத்த ஆஷஸ் தொடரில் 5 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா தெறிக்க விடும் என்று அந்நாட்டின் முன்னாள் ஜாம்பவான் வீரர் கிளன் மெக்ராத் கணித்துள்ளார். ஏனெனில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பலமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் இங்கிலாந்து அணி எப்போதும் ஆஸ்திரேலியாவில் தடுமாற்றமாகவே செயல்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கில் அதிக ரன்ஸ் அடிச்சாலும்.. கேஎல் ராகுல் தான் வெற்றிக்கான அந்த முக்கிய வேலையை செஞ்சாரு.. மொய்ன் அலி

இது பற்றி மெக்ராத் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய அணி மேலே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட், நேதன் லயன் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு விளையாடும் போது சொந்த மண்ணில் நெருப்பாக செயல்படுவார்கள். எதிரணிக்கு அது கடினமாக இருக்கும். அது போக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் கொண்டுள்ள பதிவுக்கு, இம்முறை அவர்கள் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்கிறார்களா? என்பதைப் பார்ப்பதே சுவாரசியமாக இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -