கில் அதிக ரன்ஸ் அடிச்சாலும்.. கேஎல் ராகுல் தான் வெற்றிக்கான அந்த முக்கிய வேலையை செஞ்சாரு.. மொய்ன் அலி

Moeen Ali
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி சமன் செய்தது. அதிலும் ஓவல் மைதானத்தில் நடைபெற்றால் கடைசிப் போட்டியில் இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

அந்த வெற்றிக்கு அனைவருமே முக்கிய பங்காற்றிய நிலையில் பேட்டிங் துறையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற சுப்மன் கில் 754 ரன்கள் குவித்து உச்சகட்ட பங்கை ஆற்றினார். அதனால் நிறைய சாதனைகளையும் படைத்த அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில் சுப்மன் கில்லை விட கேஎல் ராகுல் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமானதாக மொய்ன் அலி பாராட்டியுள்ளார்.

- Advertisement -

கில்லை விட முக்கியமான ராகுல்:

குறிப்பாக ஆரம்பத்திலேயே மிகவும் நங்கூரமாக விளையாடிய ராகுல் புதிய பந்தை தேய்த்து அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்கியதாக அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுல் போன்றவர் அதிலும் ஓப்பனிங் இடத்தில் விளையாடுவதின் அருமையை மக்கள் உணர்ந்திருப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை”

“கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் அசத்திய ராகுல் தற்போதைய தொடரிலும் அசத்தியுள்ளார். உண்மையில் சுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். ஆனால் இந்திய அணியில் கேஎல் ராகுல் செய்த வேலை மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். நீண்ட வருடங்களாக விளையாடியதில் இப்போது தான் அவருடைய சிறந்த ஆட்டத்தைப் பார்த்துள்ளேன்”

- Advertisement -

மொய்ன் அலி பாராட்டு:

“மிகவும் நல்ல வீரரான ராகுல் உலகிலேயே மிகவும் சிறந்த வீரர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன். இதை நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். சில நேரங்களில் அவர் தன்னுடைய ஹேண்ட் பிரேக்கை எடுத்து இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக விளையாடுவதில்லை என்று நான் கருதுகிறேன். அதையும் தாண்டி அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று நான் சொல்வேன்”

இதையும் படிங்க: டி20 மட்டுமல்ல.. டெஸ்ட் போட்டிகளிலும் கம்பேக் கொடுக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் – காரணம் அவங்க 2 பேர் தானாம்

“இது நீங்கள் பார்க்க விரும்பக்கூடிய ஒரு நல்ல தொடராக அமைந்தது. கில், ராகுல், ரூட் ஆகியோரைப் போல இரு அணியிலும் நல்ல தரமான பேட்டிங் விளையாடப்பட்டது. இத்தொடரை திரும்பிப் பார்க்கும் போது வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அபாரமாக செயல்பட்டுள்ளார்கள். இத்தொடரில் இரு அணிகளும் ஏராளமான சண்டை மற்றும் போராடும் குணத்தைக் காண்பித்துள்ளனர்” என்று பாராட்டினார்.

Advertisement