இந்திய அணியில் அவர் ஒருத்தர் 2 பேருக்கு சமம். அவ்ளோ ஸ்ட்ராங்கான பிளேயர் அவரு – மெக்ராத் புகழாரம்

Mcgrath
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளரான கிளென் மெக்ராத் சமீபகாலமாகவே கிரிக்கெட்டில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து தொடர்ச்சியாக பேசி வருகிறார். அதோடு இந்திய அணி குறித்தும், இந்திய அணி வீரர்கள் குறித்தும் அவர் பல நல்ல கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார். அவரது கருத்துக்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டான ஹார்டிக் பாண்டியாவை தற்போது அவர் புகழ்ந்து பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு பாராட்டினை பெற்றுள்ளது.

Hardik Pandya 2

- Advertisement -

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய பாண்டியா இதுவரை 11 டெஸ்ட் போட்டிகள், 66 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே அசத்தும் பாண்டியா கடந்த சில ஆண்டுகளாகவே முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த வேளையில் கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

பின்னர் பந்து வீசாமல் இருந்து வந்த பாண்டியா இனி இந்திய அணிக்கு செட்டாக மாட்டார் என்றும் அவருடைய பேட்டிங் பார்மும் முழுவதுமாக சரிந்ததாக அனைவரும் கருத்துக்களை கூறினார். ஆனால் கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொண்ட பாண்டியா தீவிர பயிற்சிக்கு பின்னர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது கம்பேக்கை கொடுத்து குஜராத் அணிக்காக கேப்டனாக இருந்து பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தி ஐபிஎல் கோப்பையையும் பெற்றுக் கொடுத்தார்.

Hardik Pandya 1

அதனை தொடர்ந்து மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த அவர் தற்போது அற்புதமாக பந்து வீசுவது மட்டுமின்றி விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகிறார். அதோடு ஒரு பொறுப்பான பேட்ஸ்மேனாக ரன்களையும் குவித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியாவின் இந்த செயல்பாடு குறித்து பேசியுள்ள மெக்ராத் கூறுகையில் : பாண்டியா மிகவும் ஒரு நம்பிக்கையான கிரிக்கெட் வீரர். இந்திய அணிக்காக அவர் தற்போது விளையாடி வரும் விதம் மிகச் சிறப்பாக உள்ளது.

- Advertisement -

அவர் நன்றாக பந்து வீசினால் அந்த போட்டியில் அவரது பேட்டிங்கிலும் அது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு போட்டியில் சிறப்பாக அவர் பந்து வீசும் பட்சத்தில் அதிரடியாக பேட்டிங்கும் செய்கிறார். என்னை பொறுத்தவரை இந்திய அணியில் அவர் இரண்டு வீரர்களின் சமமான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்துகிறார். பாண்டியா ஒரு நல்ல பந்துவீச்சாளர் அது மட்டும் இன்றி சக்தி வாய்ந்த பேட்ஸ்மேனாகவும் உள்ளார்.

இதையும் படிங்க : 9 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு தனது தாயை நேரில் சந்தித்த மும்பை இந்தியன்ஸ் வீரர் – நெகிழ்ச்சி பதிவு

அவரிடம் நல்ல திட்டம் இருப்பதினால் அவரால் மிகச் சிறப்பாக செயல்பட முடிகிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார். அவரது இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் முன்னணி துவக்க வீரரான ராகுல் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் புதிய துணைக்கேப்டனாகவும் பாண்டியா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ஒரு செய்தி பிசிசிஐ மூலம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement