எனக்கு இன்னும் கொஞ்சம் மாதம் டைம் ஆகும். ஐ.பி.எல் துவங்கும் முன்னரே முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – மேக்ஸ்வெல்

Maxwell
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் பதினாறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் இந்த தொடரில் விளையாட இருக்கும் அனைத்து அணிகளும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

IPL 2022 (2)

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் பல அணிகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் தொடர்ச்சியாக காயம் காரணமாக விலகி வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே பல முன்னணி வீரர்கள் இந்த தொடரில் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

இவ்வேளையில் தற்போது ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல் தனது காயம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மேக்ஸ்வெல் விளையாட்டாக ஈடுபட்ட ஒரு சம்பவத்தில் காயமடைந்து எலும்பு முறிவினை சந்தித்தார்.

Glenn Maxwell

அதன் பிறகு நான்கு மாதம் ஓய்வில் இருந்த அவர் அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் தற்போது தன்னுடைய காயம் குறித்த தகவலை வெளியிட்டிருந்த மேக்ஸ்வெல் :

- Advertisement -

தற்போது எனது கால் ஓகே என்ற லெவலில் தான் இருக்கிறது. ஆனால் 100% என்னுடைய காலில் உள்ள காயம் குணமடைய பல மாதங்கள் ஆகும் என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். இதன் காரணமாக இவர் முழு உடல் தகுதியுடன் இல்லை என்று அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் ஆர்.சி.பி அணிக்காக அவர் லீக் போட்டிகளில் விளையாடுவாரா? அல்லது அவரது உடற்தகுதியை வைத்து அணியில் அவர் தேர்வு செய்யப்பட மாட்டாரா? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க : எத்தனை விருது வாங்குனாலும் இதுக்கு ஈடாகுமா – வைரல் புகைப்படத்தை கொண்டாடும் விராட் கோலி ரசிகர்கள், விவரம் இதோ

கடந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 6 விக்கெட்டுகளையும், குறைந்த அளவிலான ரன்களை மட்டுமே குவித்துள்ளார். இந்நிலையில் இந்த தொடரிலும் அவர் இடம்பெறாமல் போனால் அவர் மீது பல்வேறு விமர்சனம் எழும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement