இங்கிலாந்து அணிக்கெதிரான அடுத்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் விலகல் – இப்படியா நடக்கனும்?

AUS
- Advertisement -

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து மோசமாக இந்த தொடரை தொடங்கியது.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக திகழும் ஆஸ்திரேலிய அணி இப்படி உலக கோப்பையை மோசமாக துவங்கியதில் ரசிகர்களுக்கு மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அதனை தொடர்ந்து நடைபெற்ற இலங்கை, பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து என அடுத்த அடுத்த நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி நான்காவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி நவம்பர் 4-ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அகமதாபாத் நகரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அவர்களது அரையிறுதி வாய்ப்பு மேலும் பிரகாசம் அடையும் என்பதால் இந்த போட்டி முக்கியமான ஒரு போட்டியாக பார்க்கப்படுகிறது.

இப்படி அவர்கள் அரையிறுதிக்கு செல்ல முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் இந்த போட்டிக்கு முன்னதாக தற்போது அந்த அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல் இங்கிலாந்து அணிக்கு எதிரான அந்த போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த நடப்பு 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிராக 40 பந்துகளில் அதிவேக சதம் அடித்தது மட்டுமின்றி 6 போட்டிகளில் 196 ரன்களையும், நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தலான ஆல்ரவுண்டராக செயல்பட்டு வரும் மேக்ஸ்வெல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : அவருக்கு கொஞ்சம் கூட ஈகோவே இல்லை.. வெய்ட் பண்ணி என்கிட்ட பேசுனாரு.. சோயப் மாலிக் வியப்பு

அந்தவகையில் அகமதாபாத் நகரில் பயிற்சியினை மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் ஹோட்டல் அறையில் இருந்து கோல்ப் விளையாட சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சென்ற போதே அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அவரது இந்த விலகல் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் விரைவில் அவர் எந்த காயத்தில் இருந்து குணமடைந்து அடுத்த போட்டியில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement