- Advertisement -
ஐ.பி.எல்

2026 ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல்.. என்ன காரணம்? – விவரம் இதோ

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றிய வீரர்களின் பட்டியலையும், தக்க வைத்த வீரர்களின் வெளியிட்டு விட்டனர்.

ஐ.பி.எல் 2026 தொடரில் இருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல் :

அந்த வகையில் வெளியான பட்டியலில் பல்வேறு அணிகளில் நட்சத்திர வீரர்கள் பலரும் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளதால் இந்த மினி ஏலமானது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில் இந்த மினி ஏலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது பெயரை பதிவு செய்திருந்தாலும் அதில் 77 வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுக்கப்படுவார்கள்.

- Advertisement -

அதனால் இந்த மினி ஏலத்தில் எந்தெந்த வீரர்களை எந்தெந்த அணிகள் தேர்வு செய்யப்போகிறது? என்பது குறித்து எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இந்த மினி ஏலத்திற்கான பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யாமல் அடுத்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆண்ட்ரே ரசலை வெளியேற்றிய நிலையில் அவர் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கிளென் மேக்ஸ்வெல்லும் அடுத்த ஆண்டு விளையாட மாட்டார் என்று கூறி விலகியதால் கேமரூன் கிரீன் மீது அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது.

- Advertisement -

இப்படி அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரிலிருந்து திடீரென கிளென் மேக்ஸ்வெல் விலக காரணம் யாதெனில் : இந்த ஆண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக 2025 ஐ.பி.எல் தொடரின் பாதியில் விலகிய அவர் தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்து வந்தார்.

இதையும் படிங்க : விராட், ரோஹித் அந்த ஓய்வை வாபஸ் செய்ய மாட்டாங்க.. இருக்கும் வரை என்ஜாய் பண்ணுங்க.. அஸ்வின்

அதன் காரணமாக அவர் அடுத்த ஆண்டு ஓய்விற்காகவே ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 78 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார். அதோடு பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார் என்பதால் ஏற்கனவே பஞ்சாப் அணி அவரை வெளியேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -