விராட், ரோஹித் அந்த ஓய்வை வாபஸ் செய்ய மாட்டாங்க.. இருக்கும் வரை என்ஜாய் பண்ணுங்க.. அஸ்வின்

R ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து படுதோல்வியை சந்தித்தது. ஏற்கனவே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராகவும் இந்திய அணி வரலாறு காணாத ஒய்ட்வாஷ் தோல்வியைத் தழுவியது. அதன் காரணமாக அனுபவமிக்க விராட் கோலி, ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைக்கிறார்கள்.

சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை திரும்பப் பெறுமாறு பிசிசிஐ விராட் கோலியிடம் பேசி வருவதாக ஒரு வதந்தியான செய்திகள் காணப்படுகிறது. இந்நிலையில் யோசித்து எடுத்த ஓய்வு முடிவை விராட், ரோஹித் திரும்ப பெற மாட்டார்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். எனவே இனிமேல் யார் சொன்னாலும் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கேட்டாலும் வரமாட்டாங்க:

இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “இதில் சிந்திப்பதற்கு என்ன இருக்கிறது? நாங்கள் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதை சிந்தித்து எடுக்கிறோம். ஓய்வு முடிவை யாரும் ஒருநாள் இரவில் எடுக்க மாட்டார்கள். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற முடிவை விராட் கோலி சிந்தித்து முடிவெடுத்திருப்பார் என்று என்னால் நியாயமான முறையில் சொல்ல முடியும்”

“ஓய்வு பற்றி யாருமே உள்ளுணர்வை வைத்து முடிவெடுக்க மாட்டார்கள். ரசிகர்கள் மீண்டும் விராட் கோலி விளையாடுவதைப் பார்க்க விரும்புவார்கள். நேற்று ராஞ்சி ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடிய விதத்திற்கு நாம் ஏன் அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதைப் பார்க்க விரும்ப மாட்டோம்? ஆனால் டெஸ்ட் போட்டிகள் என்பது வித்தியாசமான மீன். அதைப் பற்றிய முடிவை அவர் ஏற்கனவே எடுத்து விட்டார்”

- Advertisement -

அஸ்வின் வெளிப்படை:

“எனவே அதை மீண்டும் திரும்பிப் பார்ப்பது சரியல்ல. நம்முடைய அணியும் அடுத்த தலைமுறை மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது விராட், ரோஹித் சர்மா விளையாடும் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் பாருங்கள் என்று மட்டுமே நான் ரசிகர்களுக்கு சொல்வேன். ஏனெனில் அற்புதமான வீரர்களான அவர்களை ஓய்வு பெற்ற பின் மீண்டும் விளையாட கொண்டு வாருங்கள் என்று உங்களால் சொல்ல முடியாது”

இதையும் படிங்க: இதெல்லாம் இருந்தும் தோத்தா ரசிகர்கள் திட்டமா என்ன செய்வாங்க கம்பீர்.. வெளிப்படையாக இருங்க.. ஜஹீர் அறிவுரை

“இனிமேல் அவர்கள் எவ்வளவு காலம் விளையாடுகிறார்களோ அவ்வளவு காலம் அவர்களை நாம் கொண்டாட வேண்டும். வாழ்க்கை வேகமாக நகரும் என்று நான் எப்போதும் சொல்வேன். காலம் யாருக்காகவும் காத்திருக்காது. நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்வது முக்கியம். எனவே அவர்கள் தற்போது விளையாடும் ஆட்டத்தை நாம் மகிழ்ச்சியுடன் பார்ப்பதே நல்லது” என்று கூறினார்.

Advertisement