10 நிமிஷம் மாதிரி இருந்துச்சு.. ஃபைனலில் பிரதமர் மோடியின் செயல் பற்றி.. மேக்ஸ்வெல் ஓப்பன்டாக்

Glenn Maxwell 2
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பை வென்றது. குறிப்பாக ரோகித் சர்மா தலைமையில் சொந்த மண்ணில் தொடர்ந்து 10 வெற்றிகளுடன் எதிரணிகளை தெறிக்க விட்டு வந்த இந்தியாவை மாபெரும் இறுதிப்போட்டியில் 240 ரன்களுக்கு மடக்கி பிடித்த ஆஸ்திரேலியா உலகின் புதிய சாம்பியனாக வெற்றி வாகை சூடியது.

முன்னதாக அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு ஆதரவாக உள்ள ஒரு லட்சம் ரசிகர்களை அமைதியாக வைத்திருப்போம் என்று ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்திருந்தார். இறுதியில் சொன்னதை செய்து காட்டிய அவர் உலகக் கோப்பையை வென்ற 5வது ஆஸ்திரேலியா கேப்டன் என்ற மாபெரும் சாதனையும் படைத்தார்.

- Advertisement -

10 நிமிஷம்:
அதை விட இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தோல்வியை பார்த்து விட்டு கடைசியில் விருது வழங்கும் விழாவில் வெற்றிக் கோப்பையை ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸிடம் கொடுத்தார். அத்துடன் கோப்பையை கொடுத்த பின் அங்கிருந்து வெளியேறிய அவர் மேடையின் கீழே நின்ற ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரிடமும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அதன் காரணமாக மேடையில் வெற்றியை கொண்டாடுவதற்காக கோப்பையுடன் தயாராக இருந்த பட் கமின்ஸ் பரிதாபமாக சில நிமிடங்கள் தம்முடைய அணியினர் வரும் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் அந்த சமயத்தில் 10 நிமிடம் தாமதமாக இருந்ததைப் போல் உணரும் அளவுக்கு பிரதமர் மோடி மெதுவாக வாழ்த்து தெரிவித்ததாக கிளன் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அப்போது பொறுமையாக இருந்து அந்த சூழ்நிலையை கமின்ஸ் சிறப்பாக கையாண்டதாக பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “விருது வழங்கும் விழாவில் மோடியிடம் கை கொடுத்த பட் கமின்ஸ் கோப்பையுடன் காத்திருந்த வீடியோக்களை பார்ப்பது தற்போது வேடிக்கையாக இருப்பது. அது 10 நிமிடங்கள் வரை தாமதமாக இருந்தது போன்ற உணர்வை கொடுத்தது”

இதையும் படிங்க: மற்ற முன்னாள் வீரர்கள் மாதிரி.. என்னால் அது மட்டும் செய்ய முடியாது.. தல தோனி ஓப்பன்டாக்

“அப்போது கமின்ஸ் கோப்பையுடன் நாங்கள் வருவதற்காக சில நேரங்கள் காத்திருந்தார். அந்த சூழ்நிலைகளை அவர் மிகவும் சாமர்த்தியமாக கையாண்டார். குறிப்பாக எது நடந்தாலும் நான் மரியாதையுடன் காத்திருக்கிறேன் என்பது போல் அவர் இருந்தார். அனைவராலும் இது போன்ற பண்பை காட்ட முடியாது” என்று கூறினார். இந்த இடத்தில் 2005 சாம்பியன்ஸ் ட்ராபியை பரிசளித்து விட்டு தாமதப்படுத்திய அப்போதைய பிசிசிஐ தலைவர் சரத் பாவாரை கேப்டன் ரிக்கி பாண்டிங் தள்ளி விட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement