ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேறிய மேக்ஸ்வெல்.. என்ன காரணம்? – இருக்குற நிலைமைல இதுவேறயா?

Maxwell
- Advertisement -

கடந்த 16 ஆண்டுகளாக ஒரு ஐபிஎல் கோப்பையை கூட கைப்பற்றாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இம்முறையாவது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஆர்.சி.பி அணி மீண்டும் ஏமாற்றத்தையே தரும் வகையில் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமாக விளையாடி வருகிறது.

இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் பெங்களூரு அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று 5 தோல்விகளுடன் புள்ளிபட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 25-வது லீக் போட்டியிலும் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

குறிப்பாக ஆர்.சி.பி அணியின் வீரர்கள் பேட்டிங்கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக முதலில் விளையாடிய ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 196 ரன்களை அடித்து அசத்தியது.

ஆனால் பந்துவீச்சின் போது 15.3 ஓவர்களிலேயே 199 ரன்களை விட்டுக் கொடுத்து மோசமான தோல்வியை பெற்றிருந்தது. இப்படி ஆர்சிபி அணியின் நிலைமை மோசமாக இருக்கும் வேளையில் எதிர்வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் மேக்ஸ்வெல் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

கடந்த சில சீசன்களாக பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங்கில் அதிரடியாக செயல்படுவது மட்டுமின்றி பந்துவீச்சிலும் கைவிடக்கூடியவர் என்பதனால் முக்கிய வீரராக பார்க்கப்பட்டு வருகிறார். நடப்பு தொடரில் அவரது பார்ம் மிகவும் மோசமாக இருந்தாலும் நிச்சயம் ஏதாவது ஒரு போட்டியில் அவருக்கு ஆட்டம் க்ளிக் ஆகிவிடும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

இதையும் படிங்க : ஆர்.சி.பி அணி ஜெயிக்கணும்னா இதுமட்டும் தான் ஒரே வழி.. மத்தபடி எதுவும் வேலைக்காகாது – ஹர்பஜன் கருத்து

இவ்வேளையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த போட்டியில் மேக்ஸ்வெல் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படி மேக்ஸ்வெல் அடுத்த போட்டிக்கான ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேறியுள்ளது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement