ஆர்.சி.பி அணி ஜெயிக்கணும்னா இதுமட்டும் தான் ஒரே வழி.. மத்தபடி எதுவும் வேலைக்காகாது – ஹர்பஜன் கருத்து

Harbhajan
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-ஆவது லீக் போட்டியில் விளையாடிய டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது மீண்டும் ஒருமுறை தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது ஐந்தாவது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆர்.சி.பி அணி 196 ரன்களை அடித்திருந்தாலும் மிக எளிதாக ரன்களை வாரி வழங்கி மும்பை அணியிடம் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

குறிப்பாக பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தும் பந்துவீச்சாளர்கள் 15.3 ஓவர்களிலேயே 199 ரன்களை வாரி வழங்கி இருந்தனர். இதன் காரணமாக முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது ஆர்சிபி அணியின் மீது விமர்சனம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி கொஞ்சம் கூட போராடாமல் தோல்விகளை சந்தித்து வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் விராட் கோலியை தற்போதைய கேப்டனாக நியமிக்க சொல்வேன். ஏனெனில் அப்படி விராட் கோலி கேப்டனாக இருந்தால்தான் அந்த அணி கொஞ்சமாவது வெற்றிக்கு போராடும். டூபிளெஸ்ஸிஸ் கேப்டனாக அல்லாமல் ஒரு சாதாரண வீரராக விளையாட வைத்து விராட் கோலியை கேப்டனாக மாற்ற வேண்டும்.

இதையும் படிங்க : இந்தியாவுக்காக அந்த 2 கோப்பை ஜெயிக்காம.. இப்போதைக்கு ரிட்டையராகும் ஐடியா இல்ல.. ரோஹித் சர்மா ஓப்பன்டாக்

அப்போதுதான் அணியின் காம்பினேஷனில் மாற்றம் ஏற்படும். எனவே விராட் கோலியை உடனடியாக கேப்டனாக நியமிக்க வேண்டும். அவருடைய தலைமையில் நிச்சயம் பெங்களூரு அணி வெற்றி பெறும் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement