இந்திய பவுலர்கள் அதனால ரொம்ப கஷ்டப்பட்டாங்க.. ஜெய்ப்போம்ன்னு தெரியும்.. ஆட்டநாயகன் மேக்ஸ்வெல் பேட்டி

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3வது போட்டி நவம்பர் 28ஆம் தேதி கௌகாத்தியில் நடைபெற்றது அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அதிரடியாக விளையாடி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக துவக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் சதமடித்து 123* (57) ரன்கள் சூரியகுமார் யாதவ் 39 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 35, ஆரோன் ஹார்டி 16, ஜோஸ் இங்லிஷ் 10, மார்கஸ் ஸ்டோனிஸ் 17, டிம் டேவிட் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

பனியின் தாக்கம்:
அதற்கேற்றார் போல் டெத் ஓவர்களில் இந்திய பவுலர்கள் மோசமாக பந்து வீசியதை பயன்படுத்திய அவர் சரவெடியாக 8 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதமடித்து 104* (48) ரன்கள் விளாசி கடைசி பந்தில் ஆஸ்திரேலியாவுக்கு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அவருடன் மேத்தியூ வேட் 28* (16) ரன்கள் எடுத்ததால் ரவி பிஷ்னோய் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் இந்தியாவின் வெற்றியை தடுத்த ஆஸ்திரேலியா 2023 உலகக் கோப்பை போலவே இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

இந்நிலையில் கடைசி ஓவர் வரை விளையாடினால் தங்களால் வெற்றி பெற முடியும் என்று நம்பியதாக சதமடித்து இந்தியாவின் வெற்றியை தூளாக்கிய கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். குறிப்பாக இரவு நேரத்தில் பனியின் தாக்கம் இருந்ததால் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீச தடுமாறியது தங்களின் வெற்றியில் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த போட்டி மிகவும் வேகமாக நடந்தது. அதிகப்படியான பனி இருந்ததால் இந்திய பவுலர்களுக்கு சரியான யார்க்கர் பந்துகளை வீசுவது கடினமாக இருந்தது. அதனால் இலக்கைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் கடைசி வரை நின்றால் போட்டியில் வெல்ல முடியும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்”

இதையும் படிங்க: உ.கோ ஜெய்ச்ச எங்களுக்கு இதெல்லாம் ஈஸி.. அதிரடி சாதனையுடன் இந்தியாவின் வெற்றியை மேக்ஸ்வெல் பறித்தது எப்படி?

“குறிப்பாக கடைசி கட்ட ஓவர்களில் அக்சர் பட்டேலை நொறுக்குவதற்காக மேத்யூ வேட் தயாராக இருந்தார். கடைசி நேரங்களில் அவர் விளையாடிய ஆட்டம் போட்டியை வெற்றிகரமாக முடிப்பதற்கு எனக்கு மிகவும் உதவியது” என்று கூறினார். அவர் கூறுவது போல தம்முடைய முதல் 3 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியும் 19வது ஓவரில் அக்சர் படேல் 22 ரன்களை வாரி வழங்கும் அளவுக்கு பனியின் தாக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement