உ.கோ ஜெய்ச்ச எங்களுக்கு இதெல்லாம் ஈஸி.. அதிரடி சாதனையுடன் இந்தியாவின் வெற்றியை மேக்ஸ்வெல் பறித்தது எப்படி?

Maxwell 102
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 3வது போட்டி நவம்பர் 28ஆம் தேதி 7 மணிக்கு கெளகாத்தியில் நடைபெற்றது. அதில் 2023 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்தாலும் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற இந்தியாவை வீழ்த்தினால் மட்டுமே இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 6 ரன்னில் அவுட்டாக அடுத்ததாக வந்த இஷான் கிசான் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாட முயற்சித்து 39 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் மற்றொரு துவக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் நிதானமாக விளையாடினார்.

- Advertisement -

அவருக்கு திலக் வர்மா கம்பெனி கொடுத்த நிலையில் ஒரு கட்டத்தில் 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடிய ருதுராஜ் நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலான பின் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார். அந்த வகையில் இறுதிவரை அவுட்டாகாமல் சிறப்பாக விளையாடிய அவர் 13 பவுண்டரி 7 சிக்ஸருடன் 123* (57) ரன்களும் திலக் வர்மா 31* (24) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் இந்தியா 222/3 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலியா சார்பில் கேன் ரிச்சர்ட்சன், ஹார்டி, பெரன்டாப் தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 223 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு ஆரோன் ஹார்டி அதிரடியாக விளையாட முயற்சித்து 16 (12) ரன்கள் அவுட்டாக ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற டிராவிஸ் ஹெட் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 35 (18) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த ஜோஸ் இங்லீஷ் 10 ரன்களில் அவுட்டானாலும் கிளன் மேக்ஸ்வெல் வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

இருப்பினும் எதிர்ப்புறம் தடுமாறிய மார்க்கஸ் ஸ்டோனிஸ் 17 ரன்களில் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிம் டேவிட் இளம் வீரர் ரவி பிஷ்னோய் சுழலில் கிளீன் போல்ட்டானார். அந்த நிலையில் வந்த கேப்டன் மேத்தியூ வேட் தம்முடைய பங்கிற்கு வெற்றிக்கு போராடிய நிலையில் மறுபுறம் இந்திய பவுலர்களை பந்தாடிய மேக்ஸ்வெல் அரை சதம் கடந்து அச்சுறுத்தலை கொடுத்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதனால் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த வேட் 2வது பந்தில் சிங்கிள் எடுத்தார். ஆனால் 3, 4, 5, 6 பந்துகளில் 6, 4, 4, 4 ரன்களை தெறிக்கவிட்ட மேக்ஸ்வெல் முரட்டுத்தனமான சதமடித்து 104* (48) ரன்கள் விளாசி இந்தியாவுக்கு 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை பரிசளித்தார். குறிப்பாக 47 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட அவர் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை சமன் செய்தார். அதன் காரணமாக அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகள் எடுத்தும் இந்தியா வெற்றி காண முடியவில்லை.

இதையும் படிங்க: 3 ஆவது போட்டியில் மட்டுமல்ல.. கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்தும் விலகிய வீரர் – நல்லா இருக்கட்டும்

இப்போட்டியில் கடைசி 10 ஓவர்களில் இந்தியாவின் பவுலிங் சுமாராக இருந்த நிலையில் 19, 20வது ஓவரில் அக்சர் படேல், கிருஷ்ணா ஆகியோர் முறையே 22, 21 ரன்களை வாரி வழங்கியது தோல்வியை கொடுத்தது. அதனால் உலகக்கோப்பை வென்ற எங்களுக்கு இதெல்லாம் ஈஸி என்பதை காட்டிய ஆஸ்திரேலியா 2 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரிலும் இந்தியாவை எளிதில் கோப்பையை வெல்ல முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்க துவங்கியுள்ளது.

Advertisement