3 ஆவது போட்டியில் மட்டுமல்ல.. கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்தும் விலகிய வீரர் – நல்லா இருக்கட்டும்

Mukesh-Kumar
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அதற்கு அடுத்து விளையாடும் முதல் தொடர் என்பதினால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டு சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்கள் பங்கேற்று உள்ளதால் இந்த தொடரானது அனைவருக்குமே தங்களது திறமையை வெளிப்படுத்த ஒரு அற்புதமான வாய்ப்பாக அமைந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே இந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி 20 போட்டியானது நவம்பர் 28-ஆம் தேதி இன்று கவுகாத்தி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்திய அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறுகையில் : இந்த மூன்றாவது போட்டியில் முகேஷ் குமார் விளையாடவில்லை. அவரது திருமணம் காரணமாக இந்த போட்டியில் அவர் இடம் பெறவில்லை என்றும் அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் இடம் பெறுகிறார் என்றும் அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க : ஆமைவேக துவக்கம்.. 215 ஸ்ட்ரைக் ரேட்டில் மாஸ் ஃபினிஷிங்.. ஆஸியை பொளந்த ருதுராஜ் அபார சாதனை

இப்படி மூன்றாவது போட்டியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்ட முகேஷ் குமார் தனது திருமணத்திற்காக வீடு திரும்பியிருக்கும் வேளையில் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் அவர் இந்த மூன்றாவது போட்டியில் மட்டுமின்றி எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்தும் விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement