2023 உ.கோ : இந்தியா கூட பரவால்ல, கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு மெகா பின்னடைவு – 4 நட்சத்திர வீரர்கள் காயத்தால் விலகல்

Australia Team
- Advertisement -

உலகின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்கி நவம்பர் 19 வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. 1987, 2011 போல அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் ஸ்பெஷலாக நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்ல நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல தயாராகி வரும் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் எதிரணிகளில் ஏற்கனவே 5 கோப்பைகளை மென்று வெற்றிகரமான அணியாக ஆஸ்திரேலியா சிம்ம சொப்பனமாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தோல்வியின் விளிம்புக்கே சென்றாலும் அதற்காக சளைக்காமல் கொதித்தெழுந்து வெற்றிக்கு போராடும் குணத்தை கொண்ட அந்த அணி எப்போதுமே ஐசிசி தொடரின் சிறப்பாக செயல்படுவதன் காரணமாகவே 5 கோப்பைகளை வென்றுள்ளது. சொல்லப்போனால் கடந்த பிப்ரவரி மாதம் வலுவான இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் தோற்கடித்து ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலியா சமீபத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது.

- Advertisement -

4 வீரர்கள் காயம்:
அந்த வரிசையில் 2023 உலகக்கோப்பை வெல்வதற்கு தயாராவதற்காக விரைவில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு ஒருநாள் தொடர்களில் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது. அதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சென்று பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அந்த பயிற்சியின் போது காயத்தை சந்தித்த நட்சத்திர வீரர் கிளன் மேக்ஸ்வெல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக முதலில் நடைபெறும் டி20 தொடரிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலியா வாரியம் அறிவித்துள்ளது.

அத்துடன் மேத்தியூ வேட் மாற்று வீரராக செயல்படுவார் என்றும் அறிவித்துள்ள ஆஸ்திரேலிய வாரியம் மேக்ஸ்வெல் எப்போது குணமடைவார் என்பதை மருத்துவ முடிவுகள் தான் தெரிவிக்கும் என கூறியுள்ளது. அதற்கு முன்பாக சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித், மிட்சேல் ஸ்டார்க் ஆகிய 2 முதுகெலும்பு வீரர்கள் ஏற்கனவே காயத்தை சந்தித்ததால் இந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திலிருந்து வெளியேறுவதாக ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்திருந்தது.

- Advertisement -

அதே போலவே கேப்டன் பட் கமின்ஸும் ஆஷஸ் தொடரில் காயத்தால் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் தற்போது மேக்ஸ்வெல் காயமடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த 4 வீரர்களுமே உலகக் கோப்பையை வெல்வதற்கு இன்றியமையாதவர்களாக பார்க்கப்படுகிறார்கள். முன்னதாக இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் காயமடைந்திருந்தது பெரிய பின்னடைவாக இருந்து வந்தது.

இதையும் படிங்க:ஆசிய கோப்பை 2023 : அடிக்கடி மாற்றங்கள் செய்தாலும் அதுல இந்தியா பலமா இருக்காங்க ஆனால் வெற்றி கஷ்டம் தான் – வாசிம் அக்ரம் பேட்டி

ஆனால் தற்போது இந்தியா பரவாயில்லை என்பது போல் ஸ்மித், ஸ்டார்க், கமின்ஸ், மேக்ஸ்வெல் என 4 வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளதால் ஆஸ்திரேலியா இக்கட்டான நிலைமையில் இருக்கிறது. இருப்பினும் தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்காமல் காயத்திலிருந்து குணமடையும் அவர்கள் அடுத்ததாக நடைபெறும் இந்திய ஒருநாள் தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அத்தொடரில் அந்த 4 வீரர்களும் ஃபிட்டாக களமிறங்கி உலகக்கோப்பைக்கும் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியா ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement