இந்திய அணியை பந்தாடிய தென்னாப்பிரிக்க வீரர்.. ஐ.பி.எல் மெகா ஏலத்தில் – பெரிய தொகைக்கு செல்ல வாய்ப்பு

Gerald-Coetzee
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால் இந்த தொடரானது சமநிலையில் உள்ளது.

ஏலத்தில் எகிறப்போகும் தென்னாப்பிரிக்க வீரரின் மதிப்பு :

அதனைத்தொடர்ந்து எஞ்சியுள்ள இரண்டு போட்டியில் வெற்றி பெறும் அணியே இந்த தொடரை கைப்பற்றும் என்பதால் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே வேளையில் ஐபிஎல் மெகா ஏலமும் நெருங்கி வருவதால் இந்த தொடரானது வீரர்களுக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க வீரர்களான ஜெரால்டு கோட்சேவின் ஏலம் மதிப்பு பல மடங்கு உயரம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது பந்துவீச்சில் நான்கு ஓவர்களை வீசிய அவர் ஒரு மெய்டன் உட்பட 25 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அதேபோன்று பேட்டிங்கிலும் பின் வரிசையில் களமிறங்கிய அவர் ஜோடி ஸ்டப்ஸ்சுடன் ஜோடி சேர்ந்து 9 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 19 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார்.

- Advertisement -

இதன்காரணமாக அவருடைய ஏலத்தின் மதிப்பு அதிகரிக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமாகிய அவர் 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்த வேளையில் அவர் அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : ரிஷப் பண்டும் இல்ல.. கே.எல் ராகுலும் இல்ல.. சி.எஸ்.கே அணி வாங்க வாய்ப்புள்ள – விக்கெட் கீப்பர் இவர்தான்

இருந்தாலும் ஆர்.டி.எல் கார்டை பயன்படுத்தி ஜெரால்டு கோட்சேவை மீண்டும் மும்பை அணி ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அப்படி மும்பை அணி ஏலத்தில் அவரை எடுக்க தவறினால் நிச்சயம் அவர் பெரிய தொகைக்கு செல்வார் என்று தெரிகிறது.

Advertisement