சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இம்பேக்ட் வீரராகவே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவருக்கு பதிலாக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனையாவது ஏலத்தில் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது சிஎஸ்கே அணி உள்ளது. இதன் காரணமாக நிச்சயம் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அந்த அணியால் வாங்கப்படுவார் என்றும் தெரிகிறது.
சி.எஸ்.கே வரப்போகும் புதிய விக்கெட் கீப்பர் :
இந்நிலையில் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி 55 கோடி என்கிற குறைந்த தொகையுடன் செல்ல உள்ளதால் பெரிய அளவில் எந்த ஒரு வீரரையும் ஏலத்தில் எடுக்காது என ஏற்கனவே சி.எஸ்.கே அணியின் முக்கிய நிர்வாகியான சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துவிட்டார்.
இதன் காரணமாக சென்னை அணி பெரிய தொகைக்கு எந்தவொரு வீரரையும் வாங்காது என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தோனிக்கு பின்னர் விக்கெட் கீப்பராக சென்னை அணியால் வாங்கப்படுவார் என்ற ரிஷப் பண்ட் தற்போது அந்த போட்டியில் இல்லை என்று தெரிகிறது.
ஏனெனில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பெரிய தொகையை கையில் வைத்துள்ளதால் நிச்சயம் அவரை வாங்க பெரிய தொகைக்கு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் காரணமாக ரிஷப் பண்டை ஏலத்தில் எடுக்க முடியாது. அதேபோன்று மற்றொரு வீரரான கே.எல் ராகுலையும் ஏலத்தில் எடுக்க முடியாது.
கே.எல் ராகுலும் ஏலத்தில் கிட்டத்தட்ட 15 கோடி வரை செல்வார் என்பதனால் சி.எஸ்.கே அணி அவரை ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டாது. அதே வேளையில் எஞ்சியுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பஞ்சாப் பணியை சேர்ந்த ஜிதேஷ் சர்மாவை மட்டுமே ஏலத்திற்கு வருவதால் அவரை சிஎஸ்கே அணிவாங்க அதிக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : கம்பீர் இதுக்கெல்லாம் செட்டாக மாட்டார்.. நேரடியாக விமர்சித்த சஞ்சய் மஞ்சரேக்கர் – என்ன நடந்தது?
ஏனெனில் தோனியை போன்ற விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷராக பார்க்கப்படும் அவர் பெரிய தொகைக்கு செல்ல மாட்டார் என்பதால் அவரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி முயற்சிக்கும். அந்த வகையில் பார்க்கையில் நிச்சயம் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் ஜிதேஷ் சர்மா வர அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



